மேலும் அறிய
Advertisement
கடலூரில் வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு அழைத்ததால் மருமகனை கொன்ற மாமியார்
’’வேல்முருகனுக்கு தனக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் பல நாட்கள் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் மாமியார் வாக்குமூலம்’’
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி செல்வி என்பவருக்கு குமுதா என்ற பெண்ணும், இரண்டாவது மனைவி மலர் என்பவருக்கு மூன்று பெண் பிள்ளைகளும், வேல்முருகன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெரியசாமி இறந்து விட்ட நிலையில், பெரியாசாமியின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த வேல்முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த வருடம் தனது சொந்த ஊரான கழுதூர் திரும்பிய அவர் பெரியசாமியின் முதல் மனைவிக்கு பிறந்த குமுதாவின் மகள் பவித்ராவும் தானும் காதிலிப்பதாக கூறி குமுதாவின் சம்மதத்துடன் பெரம்பலூரில் கோயிலிற்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டனர். பின் திருமணம் முடிந்து வேப்பூரில் இருவரும் வசித்து வந்த நிலையில், வேல்முருகனுக்கும் தனது மனைவியின் தாயும் அக்காவுமான குமுதாவுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது, பவித்ரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவருக்கு வளையகாப்பு செய்யப்பட்டு அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார் , இந்நிலையில் கடந்த 28 தேதி மாலை வேல்முருகன் தனது மனைவியை பார்த்து வருவதாக தனது தாயிடம் கூறிவிட்டு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இரவு 11 மணியளவில் வேல்முருகனின் தாயாருக்கு, தொலைப்பேசி வாயிலாக வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடலை வேப்பூர் மருத்துவமனையில் வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தனர். பின்னர் வேல்முருகனை அடித்து கொன்றுவிட்டதாகவும், உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாக கூறி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வேல்முருகனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் இதற்கிடையில் வேப்பூர் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை துவங்கினர் காவல் துறையினர். பின் வேல்முருகன் உடலானது உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடற்கூறு ஆய்வில் வேல்முருகன் குரல்வளை நெரித்து தான் இறந்துள்ளார் எனவும், மேலும் கொலை செய்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய வேப்பூர் காவல் துறையினர் முதலில் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் குமுதா ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை செய்தனர். விசாரணையில் அதிர்ச்சி காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன.
அப்போது மாமியார் குமுதா அளித்த வாக்குமூலத்தில் மருமகன் வேல்முருகனுக்கு தனக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் பல நாட்கள் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் சம்பவத்தன்று, மது போதையில் வந்து தன்னை கட்டாயப்படுத்தி வேல்முருகன் உல்லாசத்திற்கு அழைத்தார் ஆனால் மகள் பவித்ரா பக்கத்து அறையில் படுத்திருப்பதால் வேண்டாமென மறுத்ததாகவும் ஆனாலும் அதை மீறி மருமகன் வற்புறுத்தியதால் கீழே தள்ளி விட்டதாகவும் அப்பொழுது கழுத்தை பிடித்ததில் இறந்துவிட்டார் இதனால் புடவையால் கழுத்தை இறுக்கி தூக்கில் மாட்டிவிட்டு இதை தற்கொலை போன்று செய்துவிட்டு நாடகமாட துவங்கினேன் எனவும். பின்னர் பக்கத்து அறையில் தூங்கி இருந்த தன் மகளை எழுப்பி உன் கணவர் தூக்கு மாட்டி தொங்குகிறார் என கூறினேன் நானும் என் மகளும் அவிழ்த்து வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் இறந்துவிட்டதாக கூறினார். இவ்வாறு விசாரணையில் குமுதா அவர்கள் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பின்னர் வேப்பூர் ஆய்வாளர் ரமேஷ் பாபு எஸ்ஐ சந்திரா ஆகியோர் மருமகனை கொலை செய்த மாமியார் குமுதாவை கைது செய்து விருதாச்சலம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஒன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்து உள்ளனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
சென்னை
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion