திருவண்ணாமலை : மனைவியின் மீதான சந்தேகத்தால் வெட்டிக்கொலை.. தன்னையும் மாய்த்துக்கொண்ட கணவன்..
கீழ்பென்னாத்தூர் அருேக சந்தேகத்தால் மனைவி, மாமியாரை கொடுவாளால் வெட்டி விட்டு கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த மங்கலம் பகுதியில் உள்ள கோடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (27) , இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சசிகலா (25). இவர்களுக்கு யுவனேஷ் வயது (4) என்ற மகனும் மற்றும் 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சசிகலாவின் நடத்தையில் ராமசாமிக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால், கணவன்-மனைவி இருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஆத்திரமடைந்த ராமசாமி மனைவியை அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு சசிகலா தனது தாய் வீடான கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள சோ.நம்மியந்தல் கிராமத்துக்கு குழந்தைகள் இரண்டு நபர்களையும் 2 மாதத்துக்கு முன்பு அழைத்து வந்து விட்டார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் ராமசாமி சோ.நம்மியந்தல் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது மனைவி சசிகலாவை தட்டி எழுப்பி, நம்முடைய வீட்டிற்கு செல்லாம் என்று கூறி உள்ளார். ஆனால் சசிகலா வர மறுத்தால் ஆத்திரமடைந்த ராமசாமிதான் மறைத்து வைத்திருந்த கொடுவாளை எடுத்து சசிகலாவின் கழுத்து, தலை, மற்றும் கை, கால் மற்றும் பல இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதனால் சசிகலா ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். அப்போது சசிகலா வலியில் காப்பாற்றுங்கள் என கதறி அழுது கூச்சலிட்டு உள்ளார். இந்த சத்தை கேட்டு தடுக்க வந்த மாமியார் ஞானாம்பாளை வயது (50) கையில் கொடுவாளால் வெட்டி விட்டு அங்கு இருந்து தப்பியோடி விட்டார். பின்னர் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வெட்டுப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சசிகலாவையும், கையில் வெட்டு விழுந்த ஞானாம்பாளையும் அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
அதனை தொடர்ந்து வெட்டுப்பட்ட சசிகலா இறந்து விடுவார் என பயந்த ராமசாமி கீழ்பென்னாத்தூரை அடுத்த வட்ராபுத்தூரில் ஒருவரின் விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் கோவிந்தசாமி, துணை ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மனைவின் மீது உள்ள சந்தேகத்தால் மனைவியை வெட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)