மேலும் அறிய

Sivashankar Baba: சிவசங்கர் பாபாவை 5 நாள் காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு

சிவசங்கர் பாபாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள தனியார் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி சுஷில் ஹரி பள்ளி. சிவசங்கர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்றும், வாழும் கடவுள் என்றும் கூறிக்கொண்டு, மக்களுக்கு ஆசி வழங்கி வருவதால் அவரை சிவசங்கர் பாபா என்று அழைக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்மீது அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், இவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த மாணவிகளின் புகாரை அடிப்படையாக கொண்டு, அந்த தனியார் பள்ளியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினரும், காவல்துறையினரும் சோதனை நடத்தினர். ஆனால், அப்போது அங்கு சிவசங்கர் பாபா இல்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிவசங்கர் பாபா, பள்ளியின் தாளாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா நேரில் ஆஜராகவில்லை. 

Sivashankar Baba: சிவசங்கர் பாபாவை 5 நாள் காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு

அவர் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், அவர் டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, ஆஜரான பிற நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசமும் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சிவசங்கர் பாபாவை டெல்லியில் சிபிசிஐடி போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.

Sivashankar Baba: சிவசங்கர் பாபாவை 5 நாள் காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு

இதனை தொடர்ந்து  நேற்று முன்தினம் நள்ளிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை கொண்டுவரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர் இதனை தொடர்ந்து நேற்று காலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து நேற்று   செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதனை சிபிசிஐடி போலீசார் 5 நாட்கள் வரை காவலில் எடுத்து விசாரிக்க இன்று நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலமாக மனுதாக்கல் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையில் எடுக்கப்படும் சிவசங்கர் பாபாவிடம் பலகட்ட விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் மாணவிகளிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Embed widget