மேலும் அறிய

Crime: திட்டம் போட்டு புல்லட்டுகளை மட்டும் திருடிய கும்பல் - தஞ்சையில் சிக்கிய இளைஞர்

திட்டம் போட்டு புல்லட் மோட்டார் சைக்கிள்களை மட்டும் திருடிய வந்த இளைஞர் தஞ்சாவூரில் சிக்கினார். அவரிடம் இருந்து 20 புல்லட் மோட்டார் சைகச்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்: திட்டம் போட்டு புல்லட் மோட்டார் சைக்கிள்களை மட்டும் திருடிய வந்த இளைஞர் தஞ்சாவூரில் சிக்கினார். அவரிடம் இருந்து 20 புல்லட் மோட்டார் சைகச்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் பகுதியில் திருடப்பட்ட 20 புல்லட் மோட்டார் சைக்கிள்களை திருடிய இளைஞரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மூவரை தேடி வருகின்றனர். தஞ்சாவூர் நகரம், வல்லம், ஒரத்தநாடு காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கடைகள், வீடுகள் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த புல்லட் மோட்டார் சைக்கிள்களில் அவ்வப்போது திருட்டு போனது. குறிப்பாக புல்லட்டுகள் மட்டுமே திருட்டு போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் புல்லட்டுகளாக குறி வைத்து ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்து. இதற்கிடையில் இது தொடர்பாக புல்லட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து விலை உயர்ந்த புல்லட்டை திருடும் கும்பலை கைது செய்ய, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி, தஞ்சாவூர் நகர டி.எஸ்.பி. ராஜா தலைமையிலும், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் மேற்பார்வையிலும் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் குறைந்த விலையில் புல்லட் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்வது குறித்தும் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்ட புல்லட் மோட்டார் சைக்கிளை ஒரு இளைஞரிடம் குறைந்த விலைக்கு விற்க முயலும் போது, போலீஸாரிடம் ஒருவர் சிக்கினார். பின்னர் அவரை போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் தஞ்சாவூர் பூக்கார முதல்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அரவிந்த் (30) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தஞ்சாவூர் பகுதியில் புல்லட் மோட்டார் சைக்கிள்களை மட்டும் நான்கு பேர் சேர்ந்து திருடுவதாகவும், அதில் உள்ள பதிவு எண்களை மாற்றி, குறைந்த விலைக்கு தஞ்சாவூர் பகுதியிலேயே விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி குறைந்த விலைக்கு விற்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான 20 புல்லட் மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த புல்லட் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்புடைய காசவளநாடு புதூரைச் சேர்ந்த அர்ஜூன், அரவிந்த், தஞ்சாவூர் கீழவாசலைச் சேர்ந்த அலெக்ஸ் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர். மேலும் அந்தந்த புல்லட் வாகன உரிமையாளர்களிடம் அவற்றை ஒப்படைத்தனர். 

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், விலை உயர்ந்த புல்லட் மோட்டார் சைக்கிள்களை திருடும் கும்பலை போலீசார் கைது செய்து புல்லட்டுகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளது பாராட்டுக்குரியது. இதுபோன்ற திருட்டுக் கும்பலை சேர்ந்த மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றனர்.

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget