மேலும் அறிய

சொத்துப்பிரச்னையில் 2வது மனைவியை தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது

பாலனுடன், சரண்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பாலன், சரண்யாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சொத்துப்பிரச்னையில் 2வது மனைவியை கொலை செய்த கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் சந்தை பகுதியை சேர்ந்த பாலன் (45). இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். தற்போது, உதயசூரியபுரத்தில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் என்ற கடைகளை நடத்தி வருகிறார்.

பாலன் பா.ஜ., பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளராக பதவி வகித்தார்.  கடந்த 2004ம் ஆண்டு ராஜி என்பவரை பாலன் திருமணம் செய்துள்ளார். பாலனுக்கு கபிலன் (20) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

சொத்துப்பிரச்னையில் 2வது மனைவியை தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது

இந்நிலையில், கொண்டிக்குளம், சர்கார் தோப்பு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சரண்யா (38), மதுரை செல்லுாரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருடன் திருமணமான நிலையில், மதுரையில் வசித்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு சண்முகசுந்தரம் இறந்துவிட்டார். அதன்பிறகு பாலனுடன், சரண்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பாலன், சரண்யாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.

சரண்யாவிற்கு சாமுவேல் (15), சரவணன் (13) என்ற இரண்டு மகன் உள்ளனர். பாலன், சரணவிற்கு, பா.ஜ., மகளிரணியில் பொறுப்பு வாங்கிக் கொடுத்தார். 

இதையடுத்து மதுரையில் ஏற்பட்ட பிரச்சனையால் சரண்யா தனது மகன்களுட்ன், பாலனும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு,  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரத்திற்கு வந்து  வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு, பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் கடைகளை பூட்டி விட்டு டூ வீலரில் வீட்டிற்கு சென்று விட்டனர்.

சரண்யா கடைத்தெருவில் பால் வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டு இருந்தார். அப்போது, அவரை மர்மநபர்கள் வழிமறித்து, கழுத்தில் வெட்டியுள்ளனர். இதில் சரண்யாவின் தலை தனியாக துண்டித்து விழுந்துள்ளது.   உடன் அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர். தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

இது குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று காலை பாலனின் முதல் மனைவியின் மகனான மேலுாரை சேர்ந்த கபிலன் (20), அவரது நண்பரான குகன் (20) மற்றும் கொண்டிக்குளம் சர்கார்தோப்பு பகுதியை பார்த்திபன் (20) ஆகிய மூவரும், மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 6ல் ஆஜராக முயன்றனர்.

அவர்களை நீதிபதி உத்தரவின் பேரில், மதுரை அண்ணா நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று மூன்று பேரையும் தங்களின் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். 

முதற்கட்ட விசாரணையில், பாலன் கழுகுபுலிக்காட்டில் சுமார் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் இடம் ஒன்றை, வாங்கி தனது முதல் மனைவி மகனான கபிலன் பெயரில் பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். இது குறித்து சரண்யாவுக்கு தெரியவர, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

உடனே பாலன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கபிலன் அவரது நண்பரான குகன் ஆகிய இருவரையும், பார்த்திபன் வீட்டில் தங்க வைத்து, சரண்யாவை கொலை செய்ய ஏற்பாடு செய்தது தெரியவந்தது.  தொடர்ந்து பாலனையும் போலீசார் கைது செய்தனர்.  இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget