மேலும் அறிய

கருங்கல்லைப்போட்டு மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

’’மனைவியை கருங்கல்லை போட்டு கொலை செய்ததாக, குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பரமணியனுக்கு ஆயுள் தண்டனையும், 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு’’

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மஞ்சள்வயல் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பரமணியன் (59), விவசாயியான இவருக்கு ராஜேஸ்வரி (47) என்ற மனைவியும்,இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பாலசுப்பிரமணியனுக்கு கடந்த சிறிது நாட்களாக மனைவியின் மீது சந்தேகம் வந்தது. இதனால் பாலசுப்பரமணியன் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அடிக்கடி தகராறு செய்து, அடித்து கொடுமை படுத்தியுள்ளார். இது குறித்து ராஜேஸ்வரி, அருகில் உள்ளவர்களிடமும் உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார். அவர்களும், பாலசுப்பிரமணியனிடம், மனைவி ராஜேஸ்வரியை அடித்து துன்புறுத்த கூடாது என எடுத்து கூறினார்கள்.

ஆனால் பாலசுப்பிரமணியன், மனைவி ராஜேஸ்வரியை கொடுமைபடுத்தி அடித்து வந்ததை நிறுத்த வில்லை.  இதனால் ராஜேஸ்வரி மன உளைச்சலில்  இருந்து வந்துள்ளார். இது குறித்து புலம்பி வந்தார். இதை போல் கடந்த, 2017  ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, குடிபோதையில் வந்த பாலசுப்பிரமணியன், மனைவி ராஜேஸ்வரியிடம்,  தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கி, அடித்து விட்டு, வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.

கருங்கல்லைப்போட்டு மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

பின்னர் நள்ளிரவு ஒரு மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்த பாலசுப்பரமணியன், வீட்டின் கதவை தட்டிய போது, அவரது மகள் ஜமுனாராணி கதவை திறந்துள்ளார்.  அப்போது, துாங்கி கொண்டிருந்த மனைவி ராஜேஸ்வரியை, மீண்டும் திட்டி, கொடுமைபடுத்தி, தாக்கினார். பின்னர் ராஜேஸ்வரி படுத்துறங்கினார். போதையில், ஆத்திரம் அடங்காத, பாலசுப்பரமணியன், வீட்டில் இருந்த கருங்கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டு, விட்டு தப்பியோடி விட்டார்.  இதில் ராஜேஸ்வரி துடிதுடித்து இறந்தார்.

தந்தை பாலசுப்பிரமணியன், தாய் ராஜேஸ்வரியுடம் சண்டை போட்டு விட்டு, சத்தம் இல்லாமல் இருந்ததையறிந்த, மகள் ஜமுனாராணி, உள்ளே சென்று பார்த்த போது, ரத்தவெள்ளத்தில் ராஜேஸ்வரி கிடந்தார். பின்னர் அருகிலிருந்தவர்கள், ராஜேஸ்வரியை, அதிராம்பட்டினம் அரசு மருத்தவமனைக்கு துாக்கி சென்றனர். ஆனால் பலமாக அடிபட்டதால், ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்த அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து, பாலசுப்பரமணியனை கைது செய்தனர்.  இந்த வழக்கு, தஞ்சாவூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை மகிளா கோர்ட்டின் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, மனைவியை கருங்கல்லை போட்டு கொலை செய்ததாக, குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பரமணியனுக்கு ஆயுள் தண்டனையும், 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபாரத்தை கட்ட தவறினால், 6 மாதம் கூடுதல் சிறை தண்டனை எனவும் உத்தரவிட்டார். பின்னர் பலத்த போலீசார் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்து சென்றனர். மனைவியை கொன்ற கணவனுக்க ஆயுள் தண்டனை விதித்ததால், கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
Embed widget