மேலும் அறிய
Advertisement
சென்னை அருகே பயங்கர தீ விபத்து.. புகை மண்டலமாக காட்சியளித்த பகுதிகள்..
தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது
குன்றத்தூர் அருகே தீபாவளி பண்டிகை கொண்டாட மூடப்பட்ட அட்டை கம்பெனியில் பயங்கர தீ விபத்து அருகில் இருந்த அலுமினியம் கோட்டிங் கம்பெனிக்கும் தீ பரவியதால் பரபரப்பு
இரவு அட்டை கம்பெனியில் இருந்து திடீரென புகை
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த வழுதலம்பேடு, திருமுடிவாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அட்டை கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகைக்காக அட்டை கம்பெனி இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு அட்டை கம்பெனியில் இருந்து திடீரென புகை வந்த நிலையில் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
சென்னை மாநகராட்சி ஒப்பந்த லாரிகள் மூலம்
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பூந்தமல்லி, மதுரவாயல், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 7 வாகனங்களில் விரைந்து வந்த 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கம்பெனியில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அட்டை கம்பெனி எரிந்த நிலையில் அதன் அருகிலேயே அலுமினியம் கோட்டிங் கம்பெனி இருந்ததால், அந்த கம்பெனிக்கும் தீயானது பரவியது இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீரை எடுத்து வந்து கம்பெனியில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அலுமினியம் கோட்டிங் கம்பெனிகளுக்கும் தீ பரவிய நிலையில்
இரண்டு கம்பெனிகளுக்கும் தீ பரவியதால் அதனை அனைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ கொழுந்து விட்டு எரிந்துவருவதால் கடும் சிரமத்திற்கு மத்தியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அட்டை கம்பெனி தீயில் முழுவதும் எரிந்து நாசமான நிலையில் அதில் தயார் நிலையில் வைக்கப்பட்ட அட்டை பெட்டிகள், மூலப்பொருட்கள் மற்றும் எந்திரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
அலுமினியம் கோட்டிங் கம்பெனிகளுக்கும் தீ பரவிய நிலையில் அதனையும் அனைக்கும் பனியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அலுமினியம் கோட்டிங் கம்பெனியில் ரசாயன கலவைகள் இருப்பதால் தீயை அணைப்பதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கு காரணம் மின் கசிவா, நாச வேலையா அல்லது பட்டாசு வெடித்ததா என்ற கோணத்தில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்தால் பகுதி முழுவதும் புகை மண்டலம்..
இந்த நிலையில் அலுமினியம் கோட்டிங் கம்பெனியில் தங்கி இருந்த ஊழியர்கள் சிலரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மேலும் அதில் ஊழியர்கள் வேறு யாராவது சிக்கி உள்ளார்களா எனவும் சோதனை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தீபாவளி கொண்டாட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட அட்டை கம்பெனி தீயில் எரிந்து நாசமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion