மேலும் அறிய

திண்டிவனத்தில் பதற்றம்... அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு.... எச்.ராஜா வருகைக்கு விசிக எதிர்ப்பு

திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : திண்டிவனம் மேம்பாலம் அருகே அரசு பேருந்து முன் பக்கம் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தால் திடீர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில் திண்டிவனத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வ.உ.சி திடலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்கம் மற்றும் பட்ஜெட் விளக்கம் பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மைனாரிட்டி மோட்சா தேசிய தலைவர் வேலூர் சையது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக வலைத்தளங்களில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை இழிவாக பேசிய எச்.ராஜாவை திண்டிவனம் வராதே. திரும்பி செல். இல்லையேல் திருமா திசை நோக்கி மண்டியிட்டு மன்னிப்பு கேள். என்ற வாசகத்துடன் போஸ்டர் பதிவிடப்பட்டிருந்தது.

அதேபோல் நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சேரன் சமூக வலைத்தளத்தில் இன்று பொதுக்கூட்டத்திற்கு திண்டிவனம் வருகின்ற எச்.ராஜாவிற்கு திண்டிவனம் ஆர்.எஸ் பிள்ளை வீதி அருகே கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பதிவிட்டிருந்தார். இதனால் திண்டிவனம் நகரத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்படாமல் இருக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் பெரும்பான்மையான போலீசாரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் இன்று காலை குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை திண்டிவனம் மேம்பாலம் அருகே சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற TN 32 N 4450 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்து முன் பக்க கண்ணாடியை இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் திண்டிவனத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து கண்ணாடி உடைப்பில் ஈடுபட்ட இரு நபர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?

Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Hyundai Exter Offer: 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. பட்ஜெட் கார் Hyundai Exter-ஐ ஏன் வாங்க வேண்டும்?

TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!

Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!

Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!

Embed widget