மேலும் அறிய

Untouchability case : தீண்டாமை விவகார வழக்கில் மேலும் வன்முறை நிகழாமல் தடுக்கவே குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை - அரசு வழக்கறிஞர்

இந்த சட்டப்பிரிவின்படி அதிகபட்சம் 3ஆண்டுகள் வரை குற்றவாளிகள் ஊருக்குள் நுழையாமல் தடைவிதிக்க முடியும், போலீசார் ஒரு வருட காலம் குற்றவாளிகள் ஊருக்குள் அனுமதிக்க கூடாது என நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்து உள்ளது பாஞ்சாங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் சிறுவர்களிடம் சாதி தீண்டாமையை வெளிப்படுத்திய சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் அங்கு கடை நடத்தி வரும் நிலையில் அந்த கடையில் திண்பண்டம் வாங்க சென்ற சிறுவர்களுக்கு ஊர் கட்டுப்பாட்டை காரணம் காட்டி திண்பண்டம் கொடுக்க முடியாது என்று சிறுவர்களிடம் ஜாதி தீண்டாமையை வெளிப்படுத்தியிருந்தனர். இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திர மூர்த்தி,  குமார் மகேஷ்வரன் ஆகிய  குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் முருகன், சுதா ஆகிய  இருவரை தேடி வரும் நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஊருக்குள்ள நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று  நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பத்மநாபன்  குற்றவாளிகள் 5 பேருக்கு  6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Untouchability case : தீண்டாமை விவகார வழக்கில் மேலும் வன்முறை நிகழாமல் தடுக்கவே குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை - அரசு வழக்கறிஞர்

இதுகுறித்து இந்த வழக்கில் வாதாடிய அரசு வழக்கறிஞர் கந்தசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். அதில் இது போன்ற மேலும் பல சாதி பாகுபாடு சம்பவம் நடைபெற்றதாக போலீசார் உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். எனவே அப்பகுதியில் மேலும் வன்முறை நடைபெறாமல் தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களின் உடமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் நீதிமன்றம் மூலம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஐந்து பேரும் ஆறு மாதங்கள் பாஞ்சாகுளம் கிராமத்துக்குள் நுழைய தடை பெற்றுள்ளது. இந்த சட்டப்பிரிவின்படி அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை குற்றவாளிகள் ஊருக்குள் நுழையாமல் தடை விதிக்க முடியும், இந்த வழக்கில் போலீசார் ஒரு வருட காலம் குற்றவாளிகள் ஊருக்குள் அனுமதிக்க கூடாது என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர், தற்போது நீதிபதி ஆறு மாத காலம் தடை விதித்துள்ளார் என்று தெரிவித்தார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இது போன்ற ஒரு பிரிவு இருப்பது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஐஜி அஸ்ராகார்க் எடுத்துள்ள முயற்சி காரணமாக இந்த சட்டப்பிரிவு முதல் முறையாக செயல்பாட்டிற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் GOVT ஸ்கூல் தான்” வம்பிழுத்த நிர்மலா! வச்சு செய்த கார்கேபிச்சை போட்டால் சிறையா? பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு! எச்சரிக்கும் கலெக்டர்Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணம்; கருணை அடிப்படையில் வேலை யாருக்கு? ஆர்டிஐயில் வெளியான தகவல்!
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணம்; கருணை அடிப்படையில் வேலை யாருக்கு? ஆர்டிஐயில் வெளியான தகவல்!
Embed widget