மேலும் அறிய

Crime: காதலிக்கு மெசெஜ் அனுப்பிய நண்பன்.. பகீர் திட்டம் கொலை செய்த காதலன்... நடந்தது என்ன?

தெலங்கானாவில் காதலிக்கும் பெண்ணுடன் நெருங்கி பழகிய கல்லூரி மாணவனை, சக மாணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானாவில் காதலிக்கும் பெண்ணுடன் நெருங்கி பழகிய கல்லூரி மாணவனை, சக மாணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் நவீன் என்ற மாணவனும்,  ஹரிஹர கிருஷ்ணா என்ற மாணவரும் படித்து வருகின்றனர். இருவரும் நல்கொண்டாவில் உள்ள நர்கெட்பள்ளியைச் சேர்ந்தவர்கள். நவீன் மற்றும் ஹரிஹர கிருஷ்ணா இருவரும் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. 

இவர்களில் நவீன் அந்த பெண்ணுடன் முதலில் காதலில் இருந்ததாகவும், ஆனால் அடுத்த ஓராண்டிலேயே இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அப்பெண்ணுடன் நவீன் நட்பில் இருந்துள்ளார். தினசரி இருவரும் எஸ்.எம்.எஸ்கள், செல்போன் உரையாடல்கள் என தங்கள் நட்பை வளர்த்து வந்துள்ளனர். அதேசமயம் அந்த பெண் தற்போது ஹரிஹர கிருஷ்ணாவுடன் காதலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இதனால் கிருஷ்ணாவுக்கு நவீன் அப்பெண்ணுடன் பேசுவது சுத்தமாக பிடிக்காமல் இருந்துள்ளது. இருவரும் நெருங்கி பழகுவது சந்தேகத்தை ஏற்படுத்தவே நவீனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். தனது திட்டத்தின்படி  நவீனை அப்துல்லாபூர்மேட்டில் உள்ள நண்பரின் அறைக்கு மது அருந்த கிருஷ்ணா அழைத்துள்ளார். அங்கு இருவருக்குமிடையே அப்பெண் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் நவீனை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு உடலை ஒதுக்குப்புறமான இடத்தில் போட்டு விட்டு தலைமறைவாகிவிட்டார். இதனிடையே கிருஷ்ணாவை சந்தித்துவிட்டு வீடு திரும்பாததால் நவீனை காணவில்லை என அவரது பெற்றோர் நர்கெட்பல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசாரால் கிருஷ்ணாவை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. 

அதேசமயம் கிருஷ்ணாவுடன் தனக்கு வாக்குவாதம் நடந்தது பற்றி  உடனடியாக நவீன் தனது தந்தை சங்கரய்யாவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட நவீன் உடலை நர்கெட்பல்லி போலீசார் அப்துல்லாபூர்மெட் போலீசாருடன் இணைந்து ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் கண்டுபிடித்தனர். 

பின்னர் தீவிர தேடுதலுக்குப் பின் கிருஷ்ணா தாமாகவே முன்வந்து நர்கெட்பல்லி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். முதலில் தான் கொலை செய்ததை மறுத்த கிருஷ்ணா பின்னர் ஒருவழியாக குற்றத்தைப் ஒப்புக் கொண்டார். பிப்ரவரி 17 அன்று அப்துல்லாபூர்மேட்டில் நடந்த இந்த சம்பவம் கிட்டதட்ட ஒரு வாரத்திற்குப் பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget