மேலும் அறிய

Crime: "கடைசியா உன்கிட்ட பேசணும்.." விலகிய காதலிக்கு இளைஞர் செய்த பயங்கரம்.. பகீர் வாக்குமூலம்..

தெலுங்கானாவில் பெற்றோர் பேச்சைக்கேட்டு காதலை முறித்த காதலியை காதலன் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானாவில் பெற்றோர் பேச்சைக்கேட்டு காதலை முறித்த காதலியை காதலன் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் மானாஜிபேட்டை சேர்ந்தவர் 21 வயதான சாய்பிரியா. இவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியின் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் ஸ்ரீசைலன் என்ற நபரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாய்பிரியா தான் ஸ்ரீசைலன் என்ற நபரை காதலித்து வருவதாகவும், தன்னையும் அவரையும் சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த  சாய்பிரியாவின் பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, அந்த நபருடன் பேசுவதை நிறுத்துமாறு எச்சரித்துள்ளனர். 

தொடர்ந்து, சாய்பிரியாவின் பெற்றோர்கள் ஸ்ரீசைலனை அழைத்து இனிமேல் எங்களது பெண்ணை பார்க்கவோ, பேசவோ கூடாது என எச்சரித்துள்ளனர். தொடர்ச்சியாக சாய்பிரியாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ஸ்ரீசைலன் பிரியாவின் பெற்றோரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. 

இந்தநிலையில், கடந்த 5 ம் தேதி சாய்பிரியாவிற்கு ஸ்ரீசைலன் போன் செய்து, கடைசியாக உன்னிடம் மனம்விட்டு பேச வேண்டும். அதன்பிறகு உன்னை ஒருபோது தொந்தரவு செய்யமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சாய்பிரியாவும் ஸ்ரீசைலனுடன் பைக்கில் சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் பயந்துபோன பிரியாவின் பெற்றோர்கள் தேடி அலைந்துள்ளனர். அவரது போனுக்கு கால் செய்தாலும் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. 

விடிய விடிய தேடிய நிலையில் பிரியாவின் செல்போனிலிருந்து அவரது தந்தைக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், “ அப்பா, நீங்கள் என் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஸ்ரீசைலனுடனான காதலை முறித்துவிட்டேன். தற்போது மற்றொருவரை காதலிக்கிறேன் அவரை திருமணம் செய்ய ஹைதராபாத் சென்றுள்ளேன். அதனால் என்னை தேட வேண்டாம் என அனுப்பியுள்ளார். 

இந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியா பெற்றோர் உடனடியாக மயிலார்தேவருபள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சாய்பிரியாவின் செல்போன் சிக்னலை தொடர்ந்து கண்காணித்தது வந்தனர். மேலும், சந்தேகத்தின்பேரில் ஸ்ரீசைலனை நேற்று முன்தினம் பிடித்து தீவிரமாக விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. 

வாக்குமூலம்: 

அதன்படி வாக்குமூலம் அளித்த ஸ்ரீசலன், ” எனது பேச்சை நம்பி வந்த சாய்பிரியாவை பைக்கில் முசாபேட்டா மண்டலம் கந்துரு கிராமம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றேன். அங்கு அவரிடம் மீண்டும் என்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தினேன். தொடர்ந்து அவள் சம்மதிக்காததால் ஆத்திரத்தில் பிரியாவை பாலியல் வன்கொடுமை செய்தேன். இதனை போலீசுக்கு தெரிவிப்பதாக சாய்பிரியா கூறியதால் அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து தனது உறவினர் சிவா உதவியுடன் அருகில் இருந்த கால்வாயில் புதைத்தேன்” என தெரிவித்தார். 

இதையடுத்து கால்வாயில் புதைக்கப்பட்ட சாய்பிரியாவின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஸ்ரீசைலனையும், அவனுக்கு உதவி செய்த சிவாவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget