கைரேகை வைத்து மேவாட் கொள்ளையனை தூக்கிய போலீஸ்.. தீரன் படம் பாணியில் நடந்த சம்பவம்
மேவாட் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையன் இர்பான்கானை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து போலீசர் கைது செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் குரோம்பேட்டை பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மேவாட் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை
சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, குரோம்பேட்டை கிழக்கு பேருந்து நிலையம் அருகே பல்லாவரம் நகராட்சி சிக்னல் எதிரில், சென்னை மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த தமிம் அன்சாரி. இவர் மனிதநேய மக்கள் கட்சியில் மாவட்டத் துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் அதே பகுதியில் சென்னை பிளாசா, என்ற செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். இதன் அருகே அவரது உறவினரான மன்சூர் அலிகான் , ஆண்களுக்கான துணிக்கடையும் நடத்தி வந்துள்ளார்.
தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு மறுநாள் வந்து பார்த்தபோது, செல்போன் கடையில் இடது பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு அருகில் உள்ள துணிக்கடையில் பக்கவாட்டு, மாடிப்படியாக வந்த மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து செல்போன் கடையில் இருந்த 56 புதிய செல்போன்களையும் மற்றும் கல்லாவில் வைத்திருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும், துணிக்கடையில் இருந்த 30 ஆயிரம் பணத்தையும் திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.
காத்திருந்து கைது செய்த போலீஸ்
இதுதொடர்பாக உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, தாம்பரம் மாநகர போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியை சேர்ந்த சேர்ந்த இர்பான் கான் என்ற கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் கைரேகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பரபரப்பு தகவல்
கைரேகைகளை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளி ஒருவருடைய கைரேகை ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில், தொடர்புடையது என விசாரணையில் தெரியவந்தது. சுங்குவார்சத்திரம் பகுதியில் இதேபோன்று, அப்துல் ரகுமான் என்பவருடைய கடையில் சுமார் 250க்கும் மேற்பட்ட செல்போன்களை கொள்ளை அடித்த வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி என தெரியவந்தது.
தனி படை போலீசார் அதிரடி
மேலும் திருட்டு வழக்கிலிருந்து ஜாமினில் வெளிவந்த நபர் தலைமறைவாக இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைரேகை அடிப்படையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, இர்பான் கான் என போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து இர்பான் செல்போன் என்னை வைத்து, போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
துப்பாக்கி முனையில் கைது
தொடர்ந்து சுவிட்ச் ஆப்பில் இருந்த செல்போன், மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தொடர்ந்து லொகேஷனை கண்டுபிடித்த போலீசார், உடனடியாக வட மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு மேவாட் பகுதியில் இருந்த இர்ஃபானை, கைது செய்ய முயன்ற போது , கிராம மக்கள் போலீசாரை சுற்றி வளைத்துள்ளனர். அங்கிருந்து தீரன் அதிகாரம் பாணியில், போலீசார் லாவகமாக இருப்பானை துப்பாக்கி முனையில் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.
கைரேகை ஒன்றை ஆதாரமாக வைத்து போலீசார் குற்றவாளியை கைது செய்து, சென்னை அழைத்து வந்திருக்கும் சம்பவம் பொதுமக்களிலேயே வரவேற்பு பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இர்பான் கானிடமிருந்து நான்கு செல்ஃபோன்கள் மற்றும் இரண்டு டேப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செல்போன் கடையில் கொள்ளையடித்துவிட்டு, ஜாமினில் தலைமறைவான நபர் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.