பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவனுக்கு இரண்டு கால்களும் அகற்றம்..! நேரில் சென்ற நடிகை ரஞ்சனா!
சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியில் பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவனின் இரண்டு கால்களும் நசிங்கன
சென்னை அடுத்த குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியிலிருந்து வீடுகளுக்கு செல்வதற்காக அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கம். இந்நிலையில் கொல்லச்சேரி நான்கு வழி சாலையிலிருந்து குன்றத்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் வந்தனர் . அப்போது குன்றத்தூர் தேரடி அருகே வந்தபோது படிக்கட்டில் பயணம் செய்தபடி வந்த மாணவன் ஒருவன் தவறி கீழே விழுந்ததில், அவனது காலில் சக்கரம் ஏறி இறங்கியதில் இரண்டு கால்களும் தூண்டானது.
இதனை கண்டதும் படியில் தொடங்கி வந்த சக மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் பள்ளி மாணவனின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த மாணவனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் . அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவனின் இரண்டு கால்களும் துண்டான சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை நடிகையும், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் அடித்து இறக்கி விட்ட சம்பவத்தை பலர் வரவேற்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்ட பள்ளிக்கு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களை போல் படிக்கட்டில் தொங்கியபடியும் அரசு பேருந்துகளின் மேற்கூறையில் ஏறியபடியும் சாகசங்கள் செய்தபடி ஆபத்தான முறையில் செயல்வது, இந்த பகுதியில் அதிக அளவில் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்
இந்தநிலையில் படுகாயம் அடைந்த மாணவன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கால்கள் நசுங்கேரி தொடர்ந்து மாணவனுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையில் மாணவனின் இரண்டு கால்களும் அகற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது முதல் கட்ட அறுவை சிகிச்சை மட்டுமே நடைபெற்று முடிந்துள்ளதாகவும் மூட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு மற்றொரு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவனின் இரண்டு கால்களும் அகற்றப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ரஞ்சனா நாச்சியார் வலியுறுத்தியுள்ளார். நடிகை ரஞ்சனா நாச்சியார் மருத்துவமனைக்கு சென்று மாணவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மூடப்பட்ட கதவுகளை உடைய இலவச பேருந்துகளை அரசு இயக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.