மேலும் அறிய

மயிலாடுதுறை கொலை வழக்கு - கொலைக்கான காரணம் இதுவாக இருக்கலாம் - யூகத்தின் எஸ்.பி...!

மயிலாடுதுறை இளைஞர்கள் படுகொலை விவகாரத்தில் விசாரணை முடிவுபெறவில்லை சாராய விற்பனையும் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என எஸ்பி விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை இளைஞர்கள் படுகொலை விவகாரத்தில் விசாரணை முடிவுபெறவில்லை முழுமையாக விசாரணைக்கு பிறகு கொலைக்கான காரணம் தெரியவரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட முட்டம் கிராமம் வடக்குதெரு பகுதியில் முனுசாமி என்பவரது குடும்பத்தினர் முனுசாமி, அவரது இரண்டு மகன் மற்றும் மருமகன் ஆகியோர் தொடர்ந்து சாராய வியாபாரம் செய்து வந்துள்ளனர். மேலும் இந்த சாராய விற்பனை தொடர்பாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளித்துவந்துள்ளனர். ஆனால், பல முறை புகார் அளித்தும் இது தொடர்பாக காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை இரட்டை கொலையில் திருப்பம்... காவல்துறையினர் தரும் அதிர்ச்சி தரும் விளக்கம்...


மயிலாடுதுறை கொலை வழக்கு - கொலைக்கான காரணம் இதுவாக இருக்கலாம் - யூகத்தின் எஸ்.பி...!

இளைஞர்கள் குத்தி கொலை

இந்த நிலையில் சாராய விற்பனை குறித்து அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் தினேஷை தாக்கியுள்ளனர். இதனை கண்ட தினேஷின் நண்பர்கள் அதனை தடுக்க முற்பட்டுள்ளனர். அப்போது இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் 20 வயதான ஹரிசக்தி மற்றும் 25 வயதான பொறியியல் பட்டதாரி ஹரிஷ் ஆகியோரை சாராய வியாபாரிகள் தங்கதுரை, அவரது சகோதரர் மூவேந்தன் சாராயம் விற்பனை செய்து போலீசாரல் கடந்த 11 -ஆம் தேதி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த உறவினர் ராஜ்குமார் ஆகியோர் இளைஞர்களை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த சூழலில் தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமாரை ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குடும்ப பிரச்சனை முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றதாக மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டனர். 

"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!


மயிலாடுதுறை கொலை வழக்கு - கொலைக்கான காரணம் இதுவாக இருக்கலாம் - யூகத்தின் எஸ்.பி...!

எஸ்.பி. செய்தியாளர் சந்திப்பு

மேலும் இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், இவ்வவழக்கில் கொலை சம்பவம் நடந்த உடனேயே மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மூவேந்தன் தங்கதுரை ராஜ்குமார் ஆகிய 3 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணையில் குற்றவாளிகள் சாராய விற்பனை செய்ததை தடுத்ததால் தான் கொலை சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன. அதன் அடிப்படையிலும் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Sunita Williams: பூமிக்கு வந்தால் பென்சிலை தூக்குவதே கஷ்டம்..சுனிதா வில்லியஸ் எப்போது பூமி வருகிறார்? சிக்கல்கள் என்ன?

புலன் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இச்சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை அதிகாரிகள் மெத்தனப்போக்கில் நடந்து கொண்டார்கள் என்று தெரிய வந்தால் அவர்கள் மீதும் கட்டாயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நியாயமான முறையான நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் கொலைக்கான காரணம் என தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"அதிமுகவிற்கு உண்மையிலேயே அக்கறை இருந்தா இதப் பண்ணட்டும்!" எம்பி சுதா..
4 சிறுமிகளை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சர்ச் பாதிரியார்
4 சிறுமிகளை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சர்ச் பாதிரியார்
மயிலாடுதுறையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்: 25 வயது பெண்ணுக்கு அதிகாலை நேர்ந்த கொடூரம்!
மயிலாடுதுறையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்: 25 வயது பெண்ணுக்கு அதிகாலை நேர்ந்த கொடூரம்!
"பள்ளிக்கு போகவே பயமா இருக்கு!" - தலைமையாசிரியர் கெடுபிடியால் மண்ணெண்ணெய் குடித்த 12-ஆம் வகுப்பு மாணவி...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RATION CARD : ரேஷன் கார்டில் பெயரை தூக்க போறாங்க.! இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க- வெளியான முக்கிய அறிவிப்பு
ரேஷன் கார்டில் பெயரை தூக்க போறாங்க.! இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க- வெளியான முக்கிய அறிவிப்பு
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
Russia India Ties: நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்
நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
Rasi Palan Today (26-08-2026): மகரத்துக்கு லாபம்.. சிம்மத்துக்கு வரவு.. உங்க ராசிக்கு இன்னைக்கு அதிர்ஷ்டமா?
Rasi Palan Today (26-08-2026): மகரத்துக்கு லாபம்.. சிம்மத்துக்கு வரவு.. உங்க ராசிக்கு இன்னைக்கு அதிர்ஷ்டமா?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
Embed widget