மேலும் அறிய
Advertisement
பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி காட்டி ஃபிரீ பெட்ரோல் கேட்ட கும்பல்.! தட்டித்தூக்கிய காவல்துறை
காஞ்சிபுரம் அருகே பைபாஸ் சாலையில் பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்க முயன்ற 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்
காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் பைபாஸ் சாலையில் செயல்படும் நயாரா என்னும் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஊழியர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு இலவச பெட்ரோல் கேட்டும், பணத்தை கொள்ளையடிக்கவும் முயன்றுள்ளனர். பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள் சுதாரித்துக்கொண்டு சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்ததை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட முயன்ற மர்ம நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கீழ்கதிர்பூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 6 இளைஞர்களை பிடித்து தீவிர விசாரணை செய்தனர்.
இதுகுறித்து போலீசாரின் விசாரணையில் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த சதீஷ்,பூந்தமல்லி கரையான் சாவடி சேர்ந்த இம்மானுவேல், பாலாஜி ராஜா, பிரவீன்,மற்றும் விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெகன் ராஜ், குமணன்சாவடி சேர்ந்த மதியழகன் ஆகியோர் என்பதும், இவர்கள் தான் பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்க முயற்சி செய்தது என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இளைஞர்கள் 6 பேரையும் பாலுசெட்டி சத்திரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இளைஞர்கள் பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களிலும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொள்ளைச் சம்பவம் குறித்து புகார் தெரிவித்த 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கைது செய்த பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பாராட்டு தெரிவித்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூட காஞ்சிபுரத்தில் எட்டு பேர் கொண்ட ரவுடி கும்பல் இரண்டிற்கும் மேற்பட்ட இடங்களில் அராஜகத்தில் ஈடுபட்டனர். அதேபோல் முறையாக மாமன் கொடுக்காத பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றை ரவுடிகள் சூறையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரவுடிகள் அராஜகம் இல்லாமல் கடந்த சில மாதங்களாக காஞ்சிபுரம் அமைதியாக இருந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தலைதூக்கி இருப்பது பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. காவல்துறையினர் ஆரம்பத்திலே ரவுடி கலாச்சாரத்தை கிள்ளி எறிய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion