மேலும் அறிய
தென் மாநிலங்களில் நடைபெறும் லாக்கப் மரணங்களில் முதலிடம்.. - ஆர்.பி.உதயகுமார் சொல்வது என்ன !
மொத்தம் இதுவரை 25 லாக்கப் மரணங்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளி வருகிறது - என ஆர்.பி.உதயகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்
Source : whats app
தென் மாநிலங்களில் நடைபெறும் லாக்கப் மரணங்களில் ஸ்டாலின் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது - என குற்றச்சாட்டு.
ஆர்.பி.உதயகுமார்
முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில்..,” சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலின் காவலாளி அஜித்குமார், விசாரணை அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்ல, தேசிய அளவில் நீதி கேட்டு ட்ரெண்டிக்காக உருவாகி உள்ளது. இன்றைக்கு ஸ்டாலின் திமுக ஆட்சியில் இருப்பது காவல் நிலையமா? கொலை நிலையமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இன்றைக்கு ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வு போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தகவல் வெளியிட்டது. அதில் லாக் அப் மரணத்தில் தென் மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது, என்று கூறியுள்ளது.
லாக்கப் மரணங்கள்
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் சத்தியவான் என்பவரை அழைத்து செல்லப்பட்டு அவர் உயிரிழந்தார்.
2021 செப்டம்பர் மாதம் பராமத்தி வேலூர் காவல் நிலையத்தில் மணிகண்டன் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் .
2021 டிசம்பர் மாதம் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
2022 பிப்ரவரி மாதம் நெல்லை காவல் நிலையத்தில் சுலைமான் என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
2022 ஏப்ரல் சென்னை தலைமைச் செயலாளர் காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
2022 ஏப்ரல் திருவண்ணாமலைய காவல் நிலையத்தில் தங்கமணி என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
2022 ஜூன் பழைய கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்பு என்பர் அழைத்துச் செல்லப்பட்டு உயிர் இழந்தார்.
25 லாக்கப் மரணங்கள்
ஏற்கனவே 2022 ஆண்டு நடைபெற்ற சட்டசபை மானிய கோரிக்கையில் லாக்கப் மரணம் குறித்து
எடப்பாடியார் பல்வேறு கேள்வி எழுப்பினர். ஆனால் உரிய பதிலை ஸ்டாலின் கூறவில்லை. எடப்பாடியார் கேட்ட கேள்விகளை கூட நேரடியாக ஒளிபரப்பு செய்யவில்லை. திமுக ஆட்சியில் லாக்கப் மரணம் எடுத்துக் கொண்டால் 2021 ஆண்டில் 2 மரணம், 2022 ஆண்டில் 4 மரணம், 2023 ஆண்டில் 7 மரணங்கள் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம் இதுவரை 25 லாக்கப் மரணங்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளி வருகிறது. அதேபோல கடந்த 2025 மார்ச் மாதம் முத்துக்குமார் என்ற காவலர் படுகொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடியார் கேள்வி எழுப்பும் போது உரிய பதில் இல்லை.
இங்கிலாந்து ஸ்காட்லாந்து நிகராக தமிழக காவல்துறை இருந்தது
இன்றைக்கு அரசு வேடிக்கை பார்க்கிறதா? ஸ்டாலினுக்கு நிர்வாகம் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் கையாள தெரியவில்லையா? இல்லை சாகட்டும் என்று சாக்கு போக்கு சொல்லி இருந்து விடுகிறாரா? ஸ்டாலினுக்கு காவல் துறையை வழிநடத்த தெரியவில்லையா? இதே அம்மாவின் ஆட்சியில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து நிகராக தமிழக காவல்துறை இருந்தது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
வேலைவாய்ப்பு
க்ரைம்
ஆட்டோ
Advertisement
Advertisement





















