மேலும் அறிய
சிவகங்கை: டூவீலரில் ஆடு திருட்டு, கண்காணிப்பு கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி, போலீசார் தீவிர விசாரணை!
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆடு திருட்டு
Source : whatsapp
டூவிலரில் வந்து ஆடு திருட்டு — கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.
இரவில் நடக்கும் ஆடு திருட்டுச் சம்பவம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் அருகே உள்ள குயவர் பாளையப் பகுதியில் ஆடு திருட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இரவு நேரத்தில், டூ–வீலரில் வந்த இரு மர்ம நபர்கள் வீட்டின் வெளிப்பகுதியில் கட்டிப் போடப்பட்டிருந்த ஆடுகளை தூக்கிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற பிறகு, வீட்டின் உரிமையாளர் ஆடு காணாமல் போனதை கவனித்து உடனடியாக தேடினார். ஆனால் எங்கும் தடயமின்றி இருந்ததால், அருகிலுள்ள வீடுகளின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, டூ–வீலரில் வந்த இருவர் ஆட்டை தூக்கிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
இரவு நேரங்களில் கால்நடை திருட்டு அதிகரிப்பு
இதையடுத்து, அந்த வீடியோ ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்டவர் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் கால்நடை திருட்டு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement





















