சென்னை அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை? - துப்புரவு தொழிலாளி மீது பெண் நோயாளி பரபரப்பு புகார்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்காணோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையில் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு பணிபுரியும் துப்புரவு தொழிலாளி மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்காணோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இங்கு சென்னை மணலியைச் சேர்ந்த 49 வயது பெண் ஒருவர் கிட்னி சம்பந்தமாக அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே அறுவைச் சிகிச்சை முடிந்த நிலையில் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரியும் பழனி என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது உடையை கழற்றி ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார். இதனையடுத்து புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் நடந்த பாலியல் தொல்லை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மருத்துவமனையில் பாலியல் தொல்லை குறித்த சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கொரோனா 2வது அலையின் போது ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட்ட 2 ஆண் மருத்துவர்கள், அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய திருமணமாகாத பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களில் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தும், மற்றொருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண் மருத்துவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read: பாலியல் தொழிலாளியிடம் செல்போனை பறிகொடுத்த வாலிபர் தற்கொலை முயற்சி - சேலத்தில் பரபரப்பு..!
Crime: பல் மருத்துவரிடம் அழைத்து செல்லவில்லை... கணவர் மீது கோபம்: மகனை கொன்று தற்கொலை செய்த மனைவி
மேலும் செய்திகளை காண,
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்