மேலும் அறிய

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை : பல பெண்களுடன் தொடர்பு - அதிர்ச்சி பின்னணி!

பல பெண்களுடன் இரவு நேரங்களில் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசியிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அதன் பின்னர் ஆனந்த் ஷர்மா என்னைப்போல தனிமையில் இருக்கும் பெண்கள், விவாகத்தரான பெண்களிடம் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

திருமணம் செய்துகொள்வதாக கூறி  ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் ஷர்மா என்பவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார், 48 வயது பெண் ஒருவர். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் விவாகரத்து பெற்று, இரண்டாவது திருமணம் செய்துள்ளார். துபாயில் வசித்து வந்த அவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் பிரிந்து தனியாக வசித்து வந்தார். பின்னர் தனது 3 குழந்தைகளுடன் இந்தியா திரும்பிய அவர், கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த எம்.என்.சி நிறுனத்தில் பணியாற்றி வரும் ஆனந்த் ஷர்மா (49) என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.


திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை : பல பெண்களுடன் தொடர்பு - அதிர்ச்சி பின்னணி!

அதில், ”என் தொழிலை மறுகட்டமைப்பு செய்ய வேண்டுமென்பதற்காக, எனது விவரங்களை இணையத்தில் பதிவிட்டு இருந்தேன். அதனைப் பார்த்து ஆனந்த் ஷர்மா தொழில் ரீதியாக உதவுவதாக தொடர்புகொண்டு தெரிவித்தார். பின்னர் அடிக்கடி உரையாடி  நெருக்கமாக பழகினார். தான் விவகாரத்து ஆனவர் என்றும், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்வதாகவும் ஆனந்த் ஷர்மா கூறினார். அவருடைய மனைவி மற்றும் மூத்த மகள் ஆக்ராவில் இருப்பதாகவும், எனது விவகாரத்திற்கு உதவி செய்கிறேன் எனவும் கூறினார். பின்னர் நாளடைவில் என்னை காதலிப்பதாக கூறினார். ஜென்டில்மேன் போல பேசியதால் அவரை நம்பினேன். கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்தித்தபோது, திருமணம் செய்து கொள்வதாக கூறி வலுக்கட்டயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.


திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை : பல பெண்களுடன் தொடர்பு - அதிர்ச்சி பின்னணி!

பின்னர் விவகாரத்து ஆனதாக கூறிய மனைவியுடன் ஆனந்த் ஷர்மா வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அதுகுறித்து கேட்டதற்கு அவர் பல்வேறு காரணங்களை கூறினார். ஒரு முறை எதேச்சையாக அவரது மொபைல்ஃபோனை பார்த்த போது, அதில் பல பெண்களுடன் இரவு நேரங்களில் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் பேசியிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அதன் பின்னர் ஆனந்த் ஷர்மா என்னைப் போல தனிமையில் இருக்கும் பெண்கள், விவாகரத்தான பெண்களிடம் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது ஆனந்த ஷர்மாவின் சகோதரர் பிரபாத் ஷர்மா என்னை மிரட்டினார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரளித்தார்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காததால், கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் கோவை மத்திய மகளிர் காவல் துறையினர் ஆனந்த் ஷர்மா மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல அப்பெண்ணை மிரட்டிய ஆனந்த் ஷர்மாவின் சகோதாரர் பிரதாப் ஷர்மா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

" யார்கிட்டயாவது சொன்னா கொன்னுருவேன் " - பெற்ற மகளிடம் பாலியல் அத்துமீறிய தந்தை
திருமணம் மீறிய உறவு !! கள்ளத் தொடர்பை துண்டித்ததால் கொடூரம் !! பெண் ஊழியருக்கு தீவைப்பு
திருமணம் மீறிய உறவு !! கள்ளத் தொடர்பை துண்டித்ததால் கொடூரம் !! பெண் ஊழியருக்கு தீவைப்பு
16 நாள் போராட்டம்: மதுரை மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் ஒப்படைப்பு !
16 நாள் போராட்டம்: மதுரை மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் ஒப்படைப்பு !
ஷாப்பிங் , காளஹஸ்தி சாமி தரிசனம் !! ஒரே இரவில் SI-க்கு நடந்த கொடூரம் !! பின்னணி என்ன ?
ஷாப்பிங் , காளஹஸ்தி சாமி தரிசனம் !! ஒரே இரவில் SI-க்கு நடந்த கொடூரம் !! பின்னணி என்ன ?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
TN Byelection: ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
TN Weather News: 5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
5 மாவட்டங்களுக்கு வார்னிங்? இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert: இன்று கடலில் எங்கெல்லாம் செல்லக்கூடாது..! Low Pressure, மீனவர்களுக்கான வானிலை மையம் எச்சரிக்கை
இன்று கடலில் எங்கெல்லாம் செல்லக்கூடாது..! Low Pressure, மீனவர்களுக்கான வானிலை மையம் எச்சரிக்கை
Chennai Elevated Corridor: 6 வழி மேம்பால சாலையுடன் 23KM நீளத்திற்கு புதிய மெட்ரோ.. மஹிந்த்ரா சிட்டி டூ கிளம்பாக்கம் - விவரம்
6 வழி மேம்பால சாலையுடன் 23KM நீளத்திற்கு புதிய மெட்ரோ.. மஹிந்த்ரா சிட்டி டூ கிளம்பாக்கம் - முழு விவரம்
Mahindra Thar OG: தார் OG-யை இறக்கிய மஹிந்த்ரா..! ஒவ்வொரு வேரியண்டிற்கான விலை, இன்ஜின், அம்சங்களின் பட்டியல்
தார் OG-யை இறக்கிய மஹிந்த்ரா..! ஒவ்வொரு வேரியண்டிற்கான விலை, இன்ஜின், அம்சங்களின் பட்டியல்
GOLD RATE TODAY : தங்கம் விலை மீண்டும் சரிவு! சவரனுக்கு ரூ.400 குறைவு... நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
தங்கம் விலை மீண்டும் சரிவு! சவரனுக்கு ரூ.400 குறைவு... நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
Embed widget