மேலும் அறிய

பாபநாசம் பாணியில் முயற்சி: கொழுந்தனை கொலை செய்த அண்ணி கைது!

தனக்கு பாலியல் தொல்லை தர முயன்ற கொழுந்தனை கொலை செய்த அண்ணி, சடலத்தை பாபநாசம் பாணியில் மறைக்க முயன்றது தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தலைவாநாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வம் வயது(50)அவரது மனைவி பராசக்தி வயது( 45). இரண்டு பெண் பிள்ளைகளுடன் இவர்கள் வசித்து வருகின்றனர்.  செல்வத்தின் தம்பி ராஜா ( 48) லாரி டிரைவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி வாழாமல் தன் வீட்டிற்கு சென்று விட்டதால் ராஜா தனிமையில் தன் அண்ணன், அண்ணியின் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அண்ணன் செல்வம் நேற்று வேலைக்காக சென்றுள்ளார். நள்ளிரவு மது போதையில் வீட்டுக்கு வந்த ராஜா தூங்கிக் கொண்டிருந்த அண்ணி பராசக்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பராசக்தி  அவரிடம்  போராடியும் இது தவறு எனறு எடுத்துச் சொல்லியும் மதுபோதையில் இருந்த ராஜா இதனை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து பாலியல் தொந்தரவு தந்ததால் ஆத்திரமடைந்த பராசக்தி அருகில் இருந்த கத்தியை எடுத்து ராஜாவின் கழுத்தில் வெட்டி உள்ளார்.

பாபநாசம் பாணியில் முயற்சி: கொழுந்தனை கொலை செய்த அண்ணி கைது!

வெட்டுப்பட்ட ராஜா ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பராசக்தி ராஜாவின் உடலை வீட்டில் உள்ளே இழுத்து சென்று பதுக்கி வைத்துள்ளார். சம்பவத்தை கணவருக்கு தெரிவித்துள்ளார். கொலையை மறைத்து எப்படியாவது சடலத்தை அப்புறப்படுத்தி விடலாம் என அவர்கள் திட்டமிட்டனர். பாபநாசம் படத்தில் வருவது போல செய்து விடலாம என்றும் சிந்தித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஐடியா தோன்றவில்லை. இந்த சம்பவத்தை காவல்துறையிரையினருக்கு  தெரிவிக்காமல் அனைவரும் வீட்டுக்கு வெளியே சோகத்தில் ஆழ்ந்த துக்கத்தில் அமர்ந்துள்ளனர். சோகத்தில் அமர்ந்திருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர், அவர்களிடத்தில் ஏன் சோகமாக உள்ளிர்கள் என்று விசாரித்த போது, ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் வாசலில் ரத்த வெள்ளத்தை  கண்ட பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.  ராஜாவை கத்தியால் குத்து கொலை செய்ததும், ராஜாவின் உடல் வீட்டுக்குள் இருப்பதும்  தகவல் அளிக்காமல் மறைத்து விடாலாம் என திட்டமிட்டுள்ளதும் தெரிந்து, உடனே போலீசாருக்கு புகார் செய்துள்ளனர். 

பாபநாசம் பாணியில் முயற்சி: கொழுந்தனை கொலை செய்த அண்ணி கைது!

அதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் மறைத்து வைத்திருந்த ராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராஜாவை கொலை செய்த வழக்கில் பராசக்தியை கைது செய்து செங்கம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் தொல்லைக்கு முயன்ற கொழுந்தனாரை அண்ணி கொலை செய்ததும், அதை மறைக்க முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இதற்கு முன் இது போன்ற பாலியல் தொல்லை தரப்பட்டதா, அல்லது வேறு காரணங்களுக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா எனபது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். 

Sivashankar Baba: ‛கலர் கலர் சட்டை... கூலிங் கிளாஸ்... மாடர்ன் அவதாரம் மாட்டிய கதை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget