மேலும் அறிய

கடல் அட்டை கடத்தி விற்பதற்கு பிரதான காரணமே இதுதான் - அப்படி என்ன ஸ்பெஷல்..?

கடல்வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகளை மயிலாடுதுறை அருகே காவல்துறையினர் பிடித்து ஒருவர் கைது செய்துள்ளனர்.

கடல்வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த  கடல் அட்டைகளை மயிலாடுதுறை அருகே காவல்துறையினர் பிடித்து ஒருவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலின் இளவரசி 

கடலின் இளவரசி என கடல் அட்டைகள் கூறப்படுகிறது. ஒருவித கடினமான உடல் தோலையும், உருண்டையான அமைப்பையும், அடர்ந்த கருப்பு அல்லது மணல் நிறத்தையும் கடல் அட்டைகள் காணப்படும். கடல் வாழ் உயிரினங்கள் குறிப்பாக, கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு, பால் சுறா மற்றும் சங்கு வகைகள் உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2001 -ம் ஆண்டு ஜுலை 11-ம் தேதி தடை விதித்தது. அதில், குறிப்பாக கடல் அட்டையும் ஒன்றாகும். இந்த கடல் அட்டைகளை தடை செய்ய காரணம், இவை அதிகமாக பிடிக்கப்பட்டால் அந்த இனமே அழிந்துவிடும் என்கிறார்கள். 

கடல் அட்டை கடத்தி விற்பதற்கு பிரதான காரணமே இதுதான் - அப்படி என்ன ஸ்பெஷல்..?

மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் கடல் அட்டை 

முக்கியமாக, சிங்கப்பூர், மலேசியா, சீனா போன்ற நாடுகளில், இதுபோன்ற உயிரினங்களுக்கு நிறைய வரவேற்பு உண்டு. மருந்தாகவும் , உணவாகவும் என இந்த கடல் அட்டைகளை இரண்டு வகையான பயன்பாடுகளுக்காக உபயோகிக்கறார்கள். இதில் ராஜ கடல் அட்டையானது மிகவும் விலை உயர்ந்தாகும். அதனால், இதற்கு தான் நிறைய கிராக்கி இருக்கிறதாம். உடல் சோர்வு, இயலாமை, மலச்சிக்கல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் மூட்டு வலி இந்த வகை நோய்களுக்கு இந்த கடல் அட்டைகள் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

கடல் அட்டை கடத்தி விற்பதற்கு பிரதான காரணமே இதுதான் - அப்படி என்ன ஸ்பெஷல்..?

இந்த கடல் அட்டைகளில் காண்டிரைட்டின் சல்பேட், கீழ்வாத நோயையும் குணப்படுத்த உதவும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல, கடல் அட்டை சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்பிக்கையும் கூட. கடல் அட்டை கடத்தி விற்பதற்கு பிரதான காரணமே, இதுதான் என்கிறார்கள். ஆனாலும், இது மூடநம்பிக்கை என்றும், இதுவரை அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் சொல்கிறார்கள். தவறாக பரவிய வதந்தியால், இதற்கு வெளிநாடுகளில் ஏக வரவேற்பு உள்ளதாம். எனினும் மற்ற சிறப்புகள் இருந்தாலும்கூட, இந்த அட்டைகளை பிடிப்பதற்கு உலக நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும்தான் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தண்டனை விபரம் 

தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, இதற்கான போராட்டங்களை மீனவர்கள் கையில் எடுத்தாலும்கூட, இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்க வில்லை. கடல் அட்டைகளை பிடிப்பதற்கு என மீன்களுக்கு உள்ளது போன்று பிரத்தியேகமாக எந்த ஒரு வலையும் கிடையாது. மீன்கள் பிடிக்க பயன்படுத்தும் வலையிலேயே, கடல் அட்டைகளும் வந்து மாட்டிக் கொண்டு விடும். அவ்வாறு மாட்டும் கடல் அட்டைகளை மீனவர்கள் மீண்டும் கடலிலேயே விட்டுவிட வேண்டும். அதனை விடுத்து அவைகளை கரைக்குக்கொண்டு வந்தாலே மீனவர்களுக்கு 7 ஆண்டு சிறைவாசமும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும் பறிமுதல் செய்யப்படும் கடல் அட்டைகள், உயிருடன் இருந்தால் மறுபடியும் கடலில் விடப்படும். ஒருவேளை அவை இறந்த நிலையில் இருந்தால், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, அழிக்கப்படும்.

இந்தியாவில் மட்டும் இதற்கு தடை 

கடல் அட்டைகளை, இந்தியாவில் சட்டவிரோதமாக பிடித்து அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதேபோல, இலங்கைக்கு கடல் வழியாக பல்வேறு பொருட்கள் கொண்டு செல்வதும், இலங்கையில் இருந்து பல்வேறு பொருட்களை கடத்தி வரும் நிகழ்வுகளும் தொடர் கதையாக உள்ளது. இதில், அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளும், இலங்கைக்கு கடத்திச்செல்லும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

கடல் அட்டை கடத்தி விற்பதற்கு பிரதான காரணமே இதுதான் - அப்படி என்ன ஸ்பெஷல்..?

மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மிக அருகே இலங்கை இருப்பதால் கோடியக்கரை கடல் வழியாக இலங்கைக்கு சமீபகாலமாக கடல் அட்டை, கஞ்சா, ஏலக்காய், மஞ்சள், அழகு சாதன பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறையில் பிடிப்பட்ட கடல் அட்டை 

ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும்பகுதி கடலோர பகுதிகள் ஆகும். இங்கு மீன்பிடி தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதன்காரணமாக இங்கு மீனவர்களின் வலையில் சிக்கும் கடல் அட்டைகளை சேகரித்து அவறை வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி நண்டலார் சோதனை சாவடியில் பொறையார் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த 38 வயதான மழலைமாறன் என்பவர் தரங்கம்பாடி கடல் பகுதியில் பிடிக்கப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 கிலோ கடல் அட்டையை கடத்தி வந்தது தெரிய வந்தது. 

கடல் அட்டை கடத்தி விற்பதற்கு பிரதான காரணமே இதுதான் - அப்படி என்ன ஸ்பெஷல்..?

காவல்துறையினர் விசாரணை 

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மழலைமாறனை கைது செய்து அவரிடம் இருந்த கடல் அட்டையை பறிமுதல் செய்து சீர்காழி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சீர்காழி வனத்துறையினர் மழலை மாறனை கைது செய்து அவரிடம் இருந்த கடல் அட்டையை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் காரைக்கால் துறைமுகம் பகுதியில் இருந்து படகு மூலமாக இலங்கைகு கடல் அட்டை கடத்த இருந்தது தெரிய வந்தது. மேலும் இதில் தொடர்புடையவர்கள் விபரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை ஈடுப்பட்டுள்ளனர்.

வனத்துறையினர் எச்சரிக்கை 

மேலும் இதுகுறித்து சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான் கூறுகையில், இலங்கையில் இந்த கடல் அட்டைகளை உணவுப் பொருளுக்காக பயன்படுத்தப்படுவதாக தெரிய வருகிறது. அரசால் தடை செய்யப்பட்ட வனவிலங்குகளையும், கடல் அட்டைகளையும். யாராலும் பிடிக்கப்பட்டாலோ, துன்புறுத்தினாலோ கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Embed widget