மேலும் அறிய

ஒரு பிரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம்.. என ஜெயராஜ் - பென்னிக்கிஸ் - கடுமையாக தாக்கியுள்ளனர் !

ஒரு பிரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம் என கூறிய இவர்களுடைய மனநிலை கொடூரமான மனநிலையாக உள்ளது. - ஜெயராஜின் மகள் கண்ணீர்.

தனக்கும் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று எண்ணம் அவர்களுக்கு கிடையாது. இந்த மரணம் கொடூரமானது என்றார். எங்களுக்காக போராடிய குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி என தெரிவித்தார்.

 
சாத்தான்குளம் வழக்கு
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கில் 100க்கும் மேற்பட்ட  சாட்சிய விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 9பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
 
குற்றவாளிகள் என தீர்ப்பு
 
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள அனைவரும் குற்றவாளிகள் என தீர்மானித்துள்ளதாக நீதிபதி  கூறியுள்ளார். 9 பேரின் மனநிலை மற்றும் சொத்து விவரங்கள் ஊதியங்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்து 30 ஆம் தேதிக்கு தீர்ப்பு விவரங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  ஜெயராஜின் மகள் பெர்சி பேட்டியளித்தபோது... எனது அப்பா - தம்பி இருவரையும் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தினார்கள் நீதிபதி குறிப்பிட்டார். 9 பேரும் அடித்ததால்தான் மரணம் ஏற்பட்டிருக்கிறது என தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள். தண்டனை விவரத்தை 30ஆம் தேதி கூறுவதாக சொல்லி இருக்கிறார்கள். ஐந்தே முக்கால் ஆண்டு  இந்த ஒரு நாளுக்காகத்தான் அலைந்தோம்.  இதற்கான நீதி கிடைத்திருக்கிறது, என நினைக்கிறேன். 30ஆம் தேதி என்ன தண்டனை கிடைக்கிறது என காத்திருக்கிறோம், நீதிபதியை நம்புகிறோம், நீதிமன்றங்களை நம்புகிறோம், தக்க தண்டனை கொடுப்பார்கள் என நம்புகிறோம். இந்த தண்டனைகள் மூலம் இனிமேல் இதுபோன்று பாதிக்கப்படக்கூடாது, வேதனை நடைபெறாது. இனிமேல் இதுபோன்று செய்பவர்கள் பயப்படுவார்கள் 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். எனது அப்பாவும், தம்பியின் அன்பு இல்லை. தினசரி எங்களிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். எங்களின் மூன்று பேருக்கும் மாறி, மாறி பேசுவார்கள் என் அப்பா தம்பியின் அன்பை இழந்துள்ளோம். எனது தம்பி 31 வயது அவரை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் வாழ்க்கையை தொடங்கினார். அதிகாரத்தினால் அவனுடைய வாழ்க்கையை மொத்தமாக அழித்து விட்டார்கள் அதனை நினைக்கும் போது உயிரோடு இருக்கிற வரை எங்களுக்கு வேதனையாக தான் இருக்கும்.
 
தண்டனை கொடுக்க வேண்டும்.
 
7.45 மணிக்கு கடையில் இருந்து அழைத்து போன உடனே அடிக்க தொடங்கிவிட்டனர் 7.50ல் இருந்து 11.30 மணி வரை அடித்திருக்கிறார்கள். 11.30 மணிக்கு ரகு கணேஷ் வந்து மூன்று மணி வரை என் அப்பாவின் தம்பியையும் மாறி, மாறி அடித்துள்ளனர் அப்பா முன்பு தம்பியையும் தம்பி முன்பு அப்பாவையும் தாக்கியுள்ளனர். இதையெல்லாம் ரசித்திருக்கிறார்கள் ஆய்வாளர் ரசித்திருக்கிறார் அதற்கான குற்றவாளிகள் என நிரூபணம் ஆகி இருக்கிறது. உச்சபட்ச தண்டனை கிடைக்கும் எதிர்பார்க்கிறோம். அதிகாரத்தில் நாம் இருக்கிறோம். நாம போலீஸ் நம்மளை கேள்வி கேட்க முடியாது என்பதற்காக அடித்திருக்கிறார்கள் இவர்கள் மனிதர்களே கிடையாது. இருவர் நல்லா சிக்கிருக்கிறார் வந்து அடிக்க பழக வாங்க என கூறியிருக்கிறார்கள். என்றால் மனித தன்மையே கிடையாது. மிருகமாக தான் இருந்துள்ளார்கள்  என்பது தெரிய வந்துள்ளது. உச்ச பச்ச தண்டனைகளாக இருக்கும் போது அந்த அதிகாரிகள் மற்றொரு அடிக்க தயங்குவார்கள். அவர்களுடைய குடும்பமும் பாதிக்கப்படும் இதனை யோசித்தாவது உச்சபட்ச தண்டனை கிடைக்கும் போது அவர்களுக்கு பயம் ஒருத்தரை மிருகத்தனமாக அடிக்கவும் பண்ண மாட்டார்கள் என நம்புகிறோம் அப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும்.
 
கொடூரமான மனநிலையாக உள்ளது
 
சிபிஐ விசாரணையை சிறப்பாக நடத்தினார்கள். இந்தத் தண்டனை முன்னரே வழங்கியிருக்க வேண்டும் முன்னரே வழங்கியிருந்தால் இதற்கு பின்பான நடைபெற்ற சம்பவம் தடுக்கப்பட்டிருக்கலாம். முன்விரோதம் எதுவும் இல்லை எந்த தவறும் இல்லை விசாரணை என அழைத்துச் சென்று ஒரு தகப்பனை மகன் முன்னால் அடிக்கும் போது  அதற்கான உரிமையோடு  தான் என் தம்பி கேட்டார் போலீசை எதிர்த்து பேசுவாயா என்ற காரணத்திற்காகவே பாலகிருஷ்ணன் நீ செத்தா சாகு என் சொத்தை விற்றாவது வெளியில் வந்து விடுவேன் என சொல்லி அடித்திருக்கிறார்கள். ஒரு பிரஸ் பீஸ் கிடைத்திருக்கிறது அடித்து பழகலாம் என கூறிய இவர்களுடைய மனநிலை கொடூரமான மனநிலையாக உள்ளது. தனக்கும் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று எண்ணம் அவர்களுக்கு கிடையாது. இந்த மரணம் கொடூரமானது என்றார். எங்களுக்காக போராடிய குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி என தெரிவித்தார்
 
ஜெயராஜின் மனைவி செல்வராணி பேட்டியளித்தபோது 
 
அனைவரும் எங்களுடன் சேர்ந்து போராடினார்கள் அதனால் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
மனைவி மீது சந்தேகம் !! கணவனை கொன்று நாடகமாடிய மனைவி !! கொலைக்கு தம்பி உதவியா ?
மனைவி மீது சந்தேகம் !! கணவனை கொன்று நாடகமாடிய மனைவி !! கொலைக்கு தம்பி உதவியா ?
சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
சாத்தான்குளம் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
சாத்தான்குளம் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: ”நான் செத்துட்டேனா” மொஜ்தாபா சர்ப்ரைஸ், அடித்து விட்டாரா ட்ரம்ப்? - ஈரான் போர் நிலவரம் என்ன?
Trump Iran War: ”நான் செத்துட்டேனா” மொஜ்தாபா சர்ப்ரைஸ், அடித்து விட்டாரா ட்ரம்ப்? - ஈரான் போர் நிலவரம் என்ன?
DMK Election Manifesto: மு.க.ஸ்டாலின் தந்த முக்கியமான 40 வாக்குறுதிகள்! என்னென்ன?
DMK Election Manifesto: மு.க.ஸ்டாலின் தந்த முக்கியமான 40 வாக்குறுதிகள்! என்னென்ன?
IPL 2026 MI vs KKR: ரோகித், ரிக்கெல்டன் காட்டடி.. கொல்கத்தாவை கொளுத்தி மும்பை வெற்றி!
IPL 2026 MI vs KKR: ரோகித், ரிக்கெல்டன் காட்டடி.. கொல்கத்தாவை கொளுத்தி மும்பை வெற்றி!
DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
பயப்படாதீங்க மக்களே! பெட்ரோல், எல்பிஜி தட்டுப்பாடு இல்லை..மத்திய அரசின் முக்கிய அப்டேட்
பயப்படாதீங்க மக்களே! பெட்ரோல், எல்பிஜி தட்டுப்பாடு இல்லை..மத்திய அரசின் முக்கிய அப்டேட்
DMK Election Manifesto 2026: குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகளுக்காகத் தனிச் சட்டம் - திமுகவின் அதிரடி வாக்குறுதிகள்!
DMK Election Manifesto 2026: குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகளுக்காகத் தனிச் சட்டம் - திமுகவின் அதிரடி வாக்குறுதிகள்!
ஃப்ரீசரில் பனிக்கட்டி மலை போல் இருக்கா? 5 நிமிடத்தில் ஈஸியா நீக்க இதோ சூப்பர் டிப்ஸ்!
ஃப்ரீசரில் பனிக்கட்டி மலை போல் இருக்கா? 5 நிமிடத்தில் ஈஸியா நீக்க இதோ சூப்பர் டிப்ஸ்!
IPL 2026 MI vs KKR: டாஸை வென்ற மும்பை பவுலிங்! பேட்டிங்கில் பொளக்குமா கொல்கத்தா?
IPL 2026 MI vs KKR: டாஸை வென்ற மும்பை பவுலிங்! பேட்டிங்கில் பொளக்குமா கொல்கத்தா?
Embed widget