மேலும் அறிய

சேலம் : பிரபல பிரியாணி கடையில் தால்சாவில் புழு இருந்தது உறுதி.. கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை..

உணவில் புழு இருந்ததை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள ஐந்து ரோடு அருகே பிரபல பிரியாணி கிடையான ஏ.எம் பிரியாணி கடை உள்ளது. அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நண்பர்களுடன் கடையில் கடந்த 25-ஆம் தேதி சாப்பிட வந்தவர்கள் சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளனர். அப்பொழுது பிரியாணி தால்சா எனப்படும் குழம்பு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒருவருடைய தட்டில் தால்சாவில் புழு ஒன்று இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம் : பிரபல பிரியாணி கடையில் தால்சாவில் புழு இருந்தது உறுதி.. கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை..

உடனடியாக கடை ஊழியர்களை அழைத்து குழம்பில் புழு உள்ளது, யாருக்கும் இதை பரிமாறவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதை பொருட்படுத்தாமல் கடை ஊழியர்கள் பிற வாடிக்கையாளர்களுக்கும் குழம்பு வழங்கியதால் கோபமடைந்த அவர் கடையின் உரிமையாளர் அழைத்து வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், உணவு பாதுகாப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டு கதிரவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து கடையில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவை சோதனைக்கு எடுத்துச் சென்றனர். 

சேலம் : பிரபல பிரியாணி கடையில் தால்சாவில் புழு இருந்தது உறுதி.. கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை..

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் கூறுகையில், தனது நண்பர்களுடன் உணவு அருந்த கடைக்கு வந்ததாகவும், உணவில் புழு இருந்ததை கண்டவுடன் கடையின் ஊழியரிடம் தெரிவித்தேன். அவர் அதைப் பொருட்படுத்தாமல் அருகில் இருந்தவர்களுக்கு அதே குழம்பை பரிமாறினார். இதனால் ஆத்திரமடைந்த நான் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தேன். உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புழு இருந்த குழம்பை சாப்பிட்ட எங்களுக்கு வாந்தி, தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. தரமான உணவு கொடுக்காத இந்த கடையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

சேலம் : பிரபல பிரியாணி கடையில் தால்சாவில் புழு இருந்தது உறுதி.. கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை..

இதனிடையே கடையின் உரிமையாளர் கூறும்போது, உணவகத்தில் உணவு உட்கொண்டுவிட்டு அதற்கான பணம் கேட்டபோது வாக்குவாத்தில் ஈடுபட்டதாகவும், இதனிடையே பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார். இது முதல் முறையல்ல பலமுறை இது போன்று ஐந்திலிருந்து பத்து நபர்கள் வரை அழைத்து வந்து சாப்பிட்டுவிட்டு உணவில் குறை உள்ளதாக கூறி பணம் செலுத்தாமல் செல்வார்கள். அதே போன்று தான் இன்றும் ஆறு பேருடன் வந்து பிரச்சனையில் ஈடுபட்டுவருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட கிளைகளை நடத்தி வருகிறேன். இவர்களைத் தவிர வேறு யாரும் இது போன்ற பிரச்சனைகளில் ஈடுபடுவதில்லை. மேலும் தங்களது உணவு தரம் குறித்து எங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்று கூறினார்.

சேலம் : பிரபல பிரியாணி கடையில் தால்சாவில் புழு இருந்தது உறுதி.. கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை..

இது குறித்து கடையின் உரிமையாளர் அழைத்தவுடன் வந்த காவல்துறையினர் புழு இருந்ததாக குற்றம் சாட்டிய வாடிக்கையாளர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த அருண்குமார்(28), அவரது நண்பர்களான புதுக்கோட்டையை சேர்ந்த பல்மருத்துவர் பாஸ்கரன்(28), மற்றொரு பல் மருத்துவர் பெரம்பலூரை சேர்ந்த சதீஷ்குமார்(28), சித்த மருத்துவ மாணவர் கோபிநாத்(25), சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன்(29), ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ரோஜன் என்கிற பிரபு(33) பணம் பறிப்பதற்காக கடையைப் பற்றி தவறான செய்தி பரப்பியதற்காக 3 மருத்துவர்கள் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, திடீர் திருப்பமாக உணவில் புழு இருந்ததை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் எந்த தவறும் செய்யாத மாணவர்களை கைது செய்த காவல்துறையினரை நீதிபதி கடுமையாக கண்டித்தார். பின்னர் மாணவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். 

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget