மேலும் அறிய

Crime: சேலம் ஆலையில் பரபரப்பு.. வேலைக்கு சேர்ந்த 2-வது நாளே திருட்டு திட்டம்.. காவலாளியை கொன்ற பீஹார் தொழிலாளி

தங்கையன் லீ பஜார் பகுதியில் உள்ள பருப்பு ஆலை ஒன்றில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தங்கையன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

சேலத்தில் பருப்பு ஆலையில் இரவு காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தின் போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளது. 

சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டியில் தங்கையன் என்பவர் மனைவி  லட்சுமியுடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், 58 வயதான தங்கையன் லீ பஜார் பகுதியில் உள்ள பருப்பு ஆலை ஒன்றில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தங்கையன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அதேசமயம் ஆலையில் இருந்த பணமும் கொள்ளை போயிருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் தங்கையன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் எஸ்.பி. லாவண்யா, மாடசாமி ஆகியோர் மேற்பார்வையில் உதவி ஆணையர் நாகராஜன், ஆய்வாளர் ராணி அடங்கிய தனிப்படையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதில் நள்ளிரவு இளைஞர் ஒருவர் சைக்கிளில் வந்து செல்லும் காட்சி இருந்துள்ளது.  அவர் யார் என தீவிர விசாரணை நடத்திய நிலையில், தங்கையன் உயிரிழந்த சம்பவத்தில்  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமர்ஜித்குமார் என்ற சோனுகுமார் என்ற 19 வயது நபருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தான் பருப்பு ஆலையில் வேலைக்கு சேர்ந்துள்ளார் என்பது தெரிய வந்தது. 

உடனடியாக அவரது செல்போன் நம்பரை வாங்கிய காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர் தலைமறைவான நிலையில், செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்ததில் அது சேலம் சூரமங்கலம் ரயில் நிலையத்தை காட்டியுள்ளது. விரைந்து ரயில் நிலையம் சென்ற போலீசார் அமர்ஜித்குமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

அதாவது பிப்ரவரி 8 ஆம் தேதி வேலை கேட்டு பீகாரைச் சேர்ந்த அமர்ஜித் குமார் மற்றும் ஒரு இளைஞர் வந்துள்ளனர். உள்ளூர் ஆட்கள் மூட்டைகளை ஏற்றி இறக்க வழக்கமாக ரூ.800 கூலி கேட்ட நிலையில், இவர்கள் ரூ.500 கொடுத்தால் போதும் என சொல்லியுள்ளனர். ரூ.300 மிச்சம் ஆகிறதே என எண்ணி பருப்பு ஆலை உரிமையாளர் அவர்கள் இருவரில் அமர்ஜித் சிங்கை மட்டும் வேலைக்கு அமர்த்தியுள்ளார். 

வேலைக்கு வந்த இடத்தில் அளவுக்கதிகமாக பணம் புழங்குவதைப் பார்த்த அமர்ஜித்குமார் அதனை கொள்ளையடிக்க திட்டமிட்டார். மறுநாள் இரவு ஆலையின் சுவர் ஏறி உள்ளே நுழைந்து பணத்தை எடுப்பதை தங்கையன்  பார்த்து தடுத்துள்ளார். மேலும் உரிமையாளர் மாரிக்கு தகவல் சொல்ல முயன்றதால் அதிர்ச்சியடைந்த அமர்ஜித் அங்கிருந்த சாக்குப்பையால் தங்கையன் முகத்தை மூடி கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து பணத்துடன் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. கூலி குறைவாக கொடுக்கிறோமே என நினைத்து வேலைக்கு அமர்த்தும் முன்பின் தெரியாத நபர்களால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சி..!

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
Embed widget