மேலும் அறிய

Crime: பெட்ரோல் பங்கில் ரஷ்ய பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்! அத்துமீறிய ஊழியரை தட்டித்தூக்கிய போலீஸ்!

ஜெய்பூருக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண்ணிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: ஜெய்பூருக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண்ணிடம் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து பலரும் இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது, இந்தியாவில் சுற்றிப் பார்க்கும் இடங்களை வீடியோவாக எடுத்து தங்களின் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி இந்தியா வரும் பெண்களிடம், சிலர் அத்துமீறி நடந்துக் கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. சமீபத்தில் கூட தென்கொரியாவைச் சேர்ந்த பெண் யூடியூபருக்கு, இளைஞர் ஒருவர் முத்தமிட்டு, அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ரஷ்ய பெண்ணிடம் அத்துமீறல்:

இந்நிலையில், தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்டு இருக்கிறார். இது சம்பந்தமான காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.  ஜெய்ப்பூரில் உள்ள பெட்ரோல் பங்கில் ரஷ்ய பெண்ணிடம் ஒருவர் அத்துமீறி உள்ளார். டெல்லியைச் சேர்ந்த  இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது,  பெட்ரோல் பங்கில் நின்றுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு ஊழியர் பெண்ணிடம் அத்துமீறி உள்ளார்.  அதாவது, ரஷ்ய பெண்ணை மூன்று முறை தகாத முறையில் தொட்டு இருக்கிறார். இதனால், அந்த இளைஞர், ஊழியரிடம் சண்டை போட்டுள்ளார். அந்த ஊழியர் ”நான் வேண்டுமென்றே தொடவில்லை” என்று வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால், இருவருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் சென்றுக் கொண்டிருந்தது. போலீசாரிடம் புகார் அளிக்கிறோம் என்று அந்த பெண் கூறுவது போல அந்த வீடியோவில் உள்ளது. 

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரச்சினை குறித்து விசாரித்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அந்த ஊழியர் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனை அடுத்து, பெட்ரோல் பங்க் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  பாதிக்கப்பட்ட பெண் விக்டோரியா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரது நண்பர்  டெல்லியில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். ரஷ்ய பெண் விக்டோரியா,  கடந்த சில வாரங்களுக்கு முன் ஜெய்ப்பூர் வந்திருந்தார் இந்நிலையில், தான் இன்று ரஷ்ய பெண்ணிடம் பெட்ரோல் பங்க் ஊழியர் அத்துமீறி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget