'ஆபாச படத்துல நடி...' மனைவியை கட்டாயப்படுத்திய கணவன்.. மானங்கெட்ட மாமனார், மாமியார்..! ராஜ்கோட்டில் பயங்கரம்..!
ராஜ்கோட்டில் இளம்பெண்ணை கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் கும்பலாக சேர்ந்து ஆபாச படம் நடிக்க வலியுறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் சமீபகாலமாகவே பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குஜராத்தில் அமைந்துள்ளது ராஜ்கோட். இங்கு இளம்பெண் ஒருவர் எதிர்கொண்ட இன்னல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை:
ராஜ்கோட் பகுதியில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலை நடத்தி வருபவர் தனது மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது மகனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்தார். தற்போது, 21 வயதாகிய இவர்களது மருமகளும் இவர்களுடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த இளம்பெண் ராஜ்கோட் சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் இணைந்து தன்னை ஆபாச படங்களில் நடிக்க வற்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதைக்கேட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.
நிர்வாண புகைப்படம், வீடியோ:
அந்த பெண் அளித்த புகாரின்படி, திருமணமான பிறகு அந்த இளம்பெண் கருத்தரித்த போது அவரை நிர்வாணமாக புகைப்படங்கள் எடுக்க அந்த பெண்ணின் கணவருக்கு அவரது மாமனாரே அறிவுறுத்தியுள்ளார். அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்த நிலையில், அவரை கட்டாயப்படுத்தி புகைப்படங்களையும், வீடியோக்களையம் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அவரது கணவரின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு தராவிட்டால் கொலை செய்துவிடுவோம் என்று அந்த பெண்ணை குடும்பமாக சேர்ந்து மிரட்டியுள்ளனர்.
காமுகனாக மாறிய மாமனார்:
இந்த நிலையில், அந்த பெண்ணின் மாமனார் அந்த பெண்ணின் அறையில் சி.சி.டி.வி. கேமராவை பொருத்தியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது கணவரிடம் கூறியபோது, அதற்கு அவர் நாம் இங்கு இருவரும் உறவு கொள்வதை தனது தந்தை அவரது அறையில் பொருத்தியுள்ள தொலைக்காட்சி மூலம் பார்த்து ரசிப்பார் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பெண்ணின் மாமனார் அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஆபாச தளத்தில் பதிவிட்டால் ஏராளமான பணம் கிடைக்கும் என்று, அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், அந்த பெண்ணின் கணவரும், மாமனாரும் இணைந்து மிரட்டல் விடுத்து நடிக்க வைத்துள்ளனர்.
தனது கணவன், மாமனார் மற்றும் மாமியாரால் தொடர்ந்து பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி வந்த அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பி வந்து தனது குடும்பத்தினரிடம் தனக்கு நேர்ந்த இன்னல்களை கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் மீது காவல்நிலையத்தில் பகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Cauvery Water: "தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படும்" - பாஜகவின் கோரிக்கையை நிராகரித்த கர்நாடக துணை முதலமைசர்!
மேலும் படிக்க: Himachal Pradesh: ஹிமாச்சல பிரதேசத்தில் தொடரும் மழை.. 51 பேர் உயிரிழப்பு.. கையை மீறிய நிலை.. வீடியோ இதோ..