மேலும் அறிய

புழல் சிறையில் மதுரை ரவுடியை கொலை செய்ய சதியா..? ரூ.1 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!

யார் யாருடன் பேசிக் கொண்டிருந்தார், எதற்காகபேசினார், இந்த செல் போனை கொடுத்தவர்கள் யார், எப்படி வந்தது என்ற பல்வேறு கோணங்களில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ரூபாய்.1 கோடிக்கு பேரம் பேசி, புழல் சிறையில் மதுரை ரவுடியை கொல்ல சதி?

சென்னை புழல் சிறை
 
சென்னை புழல் தண்டனை சிறையில் சுமார் 1400க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தமிழகத்தில் முக்கியமான சிறைகளில் புழல் சிறையும் உண்டு. இதனால் புழல் சிறை பல்வேறு அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் உள்ளது. பல்வேறு முக்கிய வழக்கு குற்றவாளிகள் புழல் சிறையில் தண்டனைபெற்று வருகின்றனர். இந்நிலையில் ரிவெஞ்ச் எடுக்கும் விதமாக சக சிறைவாசிகள் மூலம் மற்றொரு சிறை வாசியை கொலை செய்ய திட்டமிட்டதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து, குற்ற சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 
ரவுடி வெள்ளைக் காளியை கொலை செய்ய திட்டம்? 
 
 மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளி (எ)  காளிமுத்து (35) கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு 2024ம் ஆண்டு முதல் புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். வெள்ளைக் காளிக்கும் மற்றொரு குடும்பத்திற்கும் மதுரையில் பகை இருந்து வருகிறது. இதனால் வெள்ளைக் காளி உறவினர்களும் மற்றும் நண்பர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதே போல் எதிர் தரப்பிலும் உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் வெள்ளைக் காளி மதுரையின் முக்கிய ரவுடியாக பார்க்கப்பட்டு வருகிறது. வெள்ளைக் காளி மற்றும் அவரது எதிர் தரப்பையும் காவல்துறை கண்காணித்து வருகிறது. இந்த சூழலில் வெள்ளைக் காளியை புழல் சிறையில் கொலை செய்ய முயற்சி நடந்ததாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கொலை செய்ய திட்டம்? - வழக்கறிஞர் மனு மூலம் தகவல்
 
புழல் தண்டனை சிறையில் உள்ள சென்னை எர்ணாவூரை சேர்ந்த ரகுமான் (31), ஓட்டேரியை சேர்ந்த அஜய் (23), திருச்சியை சேர்ந்த சீவலபெரியான் (33), தஞ்சாவூரை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் (எ) லாலி மணிகண்டன் (35) ஆகியோரிடம் வழக்கறிஞர் ஒருவர் மனு பார்க்க வரும்போது, வெள்ளைக்காளியை சிறையில் கொலை செய்து விடுங்கள், ரூபாய்.1கோடி தருவதாக லாலி மணிகண்டனிடம் தெரிவித்ததாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படை யில் சிறைத்துறை அதி காரிகளின் உத்தரவின் பேரில், ரகுமான் திருச்சி சிறைக்கும், அஜய், சீவல பெரியான் கடலூர் சிறைக் கும், லாலி மணிகண்டன் சேலம் சிறைக்கும் நேற்று காலை புழல் சிறையில் இருந்து மாற்றப்பட்டனர். இதனால் சிறையில் நடைபெற இருந்த வெள்ளை காளி கொலை, உளவுத்து றையினால் தடுக்கப்பட்ட தால் சிறை அதிகாரி மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் லாலி மணிகண்டனிடம் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை செய்த போது, செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து செல்போனை பறிமுதல் செய்தனர். அவர் யார் யாருடன் பேசிக் கொண்டிருந்தார், எதற்காகபேசினார், இந்த செல் போனை கொடுத்தவர்கள் யார், எப்படி வந்தது என்ற பல்வேறு கோணங்களில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தலைப்பு செய்திகள்

"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்
" திருமணம் மீறிய உறவு " கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுவன் !! நடந்தது என்ன ?
Madurai: கல்குவாரியில் 4 வயது சிறுவன் உடல்.. இளைஞர் சிக்கியது எப்படி? வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்!
Madurai: கல்குவாரியில் 4 வயது சிறுவன் உடல்.. இளைஞர் சிக்கியது எப்படி? வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்!

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Embed widget