மேலும் அறிய

Crime: மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலில் பாலியல் தொந்தரவு - ஆசிரியருக்கு தர்ம அடி

வந்தவாசி அருகே பள்ளி மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலில் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடிக்கொடுத்த பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த அரசு பள்ளியில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த உயர்நிலை பள்ளியில் பரணி என்பவர் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  ஆசிரியர் பரணி தனது பள்ளியில் அறிவியல் பாடங்கள் சம்பந்தமாக மாணவிகளுக்கு பாடங்கள் குறித்த விளக்கம் அளிக்கவும், செய்முறை தேர்வு குறித்து பயிற்சி அளிக்கவும் தனியாக ஒரு வாட்ஸ்அப் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழுவில் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள சில மாணவிகளை மட்டும் அறிவியல் ஆசிரியர் தனியாக இரவு நேரங்களில் வீடியோ காலில் வரும்படி கூறியுள்ளார்.

 

 



Crime: மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலில் பாலியல் தொந்தரவு - ஆசிரியருக்கு தர்ம அடி

 

இதனை ‌அறியாத  பள்ளி மாணவிகள் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் வந்துள்ளனர். அப்போது ஆசிரியர் அந்த மாணவியிடம் பாடம் குறித்து பேசுவது போன்று பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு மாணவி வீடியோ காலை கட் செய்துள்ளார். அதன் பிறகு மற்ற மாணவிகளை வீடியோ காலில் வரகூறி அவர்களிடமும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து, மாணவிகள் தங்களிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர் குறித்து பெற்றோர்களிடம் தங்களுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகவும், இரவு நேரத்தில் மாணவிகளுக்கு 'வாட்ஸ் அப்'பில் வீடியோ கால் செய்வதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் பரணிக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்திற்கு  தகவல் அளித்துள்ளனர்.  காவல்துறையினர் விரைந்து பள்ளிக்கு சென்று பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படும் பட்டதாரி ஆசிரியர் பரணியை கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு காவல் நிலையத்தில்  ஆசிரியர் பரணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Dams In Karnataka:
Dams In Karnataka: "கேஆர்எஸ் முதல் கபினி வரை.." காவிரி குறுக்கே கர்நாடக கட்டிய அணைகள் எத்தனை?
Embed widget