மேலும் அறிய

புதுக்கோட்டையில் பயங்கரம்... மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்: தடுக்க வந்த மாமியாருக்கு என்ன ஆனது?

தன் மகளை முருகன் வெட்டுவதை கண்டு அலறி அடித்துக்கொண்டு தடுக்கச் சென்ற இந்திராணியின் தாயார் லெட்சுமி (60) என்பவரையும் கையில் வெட்டியுள்ளார்.

புதுக்கோட்டை: குடும்பத் தகராறில் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவர் தடுக்க வந்த மாமியாரையும் வெட்டிய சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே  எம்.ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் இந்திராணி ( 37). இவருக்கு  திருமணமாகி தவபாலன் (12) என்ற மகன் உள்ளான். இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் பிரிந்து வந்து தந்தையுடன் இந்திராணி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு கடலை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த முருகன் என்பவரோடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திராணிக்கு இரண்டாவதாகத் திருமணம் நடந்துள்ளது.

முருகன் எம்.ராசிமங்கலத்தில் மனைவியோடு தங்கியுள்ளார். இந்நிலையில், இந்த தம்பதியினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதேபோல மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த முருகன் வீட்டிலிருந்த அரிவாளால் இந்திராணியைச் சரமாரியாகத் தலை மற்றும் கைகளில் வெட்டியுள்ளார்  இதில், படுகாயம் அடைந்த இந்திராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அப்போது தன் மகளை முருகன் வெட்டுவதை கண்டு அலறி அடித்துக்கொண்டு தடுக்கச் சென்ற இந்திராணியின் தாயார் லெட்சுமி (60) என்பவரையும் கையில் வெட்டியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். 

இதுகுறித்து, தகவல் அறிந்து அங்குச் சென்ற ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி கலையரசன் தலைமையிலான போலீஸார் இந்திராணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனையாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் முருகனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget