மேலும் அறிய

வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் தலையில் தாக்கிய தோட்டா: CISF துப்பாக்கி பயிற்சியில் விபரீதம்!

இரண்டு குண்டுகள் அவ்வாறு வந்த நிலையில், ஒரு குண்டு புகழேந்தி உணவருந்திக் கொண்டிருந்த வீட்டிற்குள் பாய்ந்தது. 

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் ஊராட்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை( CISF) வீரர்கள் அடிக்கடி பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த மையத்திற்கு அருகில் சில குடியிருப்புகள் இருப்பதாக  கூறப்படுகிறது. 

வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் தலையில் தாக்கிய தோட்டா: CISF துப்பாக்கி பயிற்சியில் விபரீதம்!

இந்நிலையில் இன்று வழக்கம் போல அந்த பகுதியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கொத்தமங்கலப்பட்டி கலைச்செல்வன் என்பவரது மகன் புகழேந்தி(11) என்பவர், அப்பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு காலை உணவு அருந்த வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பேரனுக்கு அவனது தாத்தா, உணவு அளித்த நிலையில், சிறுவன் வீட்டில் அமர்ந்து உணவு உட்கொண்டிருந்துள்ளார். அப்போது, பயிற்சியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் சுட்ட துப்பாக்கி குண்டு, குடியிருப்பு பகுதியில் நுழைந்ததாக கூறப்படுகிறது. இரண்டு குண்டுகள் அவ்வாறு வந்த நிலையில், ஒரு குண்டு புகழேந்தி உணவருந்திக் கொண்டிருந்த வீட்டிற்குள் பாய்ந்தது. 

வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் தலையில் தாக்கிய தோட்டா: CISF துப்பாக்கி பயிற்சியில் விபரீதம்!

அதில் புகழேந்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார். மற்றொரு குண்டு, வீடு ஒன்றின் உளளே நுழைந்தது. அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை உடனே தூக்கிக் கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தலைமையில் பலத்த காயம் இருப்பதால், சிறுவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், சம்பவம் நடந்த இடத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் காயம்பட்ட சிறுவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவரை தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளனர். புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில், சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவ குழுவினர் இல்லாததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. 

சிறுவனின் தலையில் இடது புறம் பாய்ந்த குண்டு, மூளையின் ஓரம் சிக்கியிருப்பதாகவும், இதனால் சிறுவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் முதலுதவி அளித்த  மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
" அக்கா கொடுத்த யோசனை " மனைவியைக் கொன்று விட்டு டெலிவரி ஊழியர் செய்த காரியம்

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget