மேலும் அறிய

Temple Entry : பட்டியலினத்தவருக்கு கோயில் நுழைவு மறுப்பு.. கட்டுப்பாட்டை முறியடித்த எஸ்.பி, மாவட்ட ஆட்சியர்.. 3 தலைமுறைகளில் நடக்காத சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் கோயிலுக்குள் தங்களை அனுமதிப்பதில்லை என்ற புகாரை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பட்டியிலின மக்களை மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

தீண்டாமை ஒரு பாவச்செயல்..! தீண்டாமை ஒரு பெருங்குற்றம்..! தீண்டாமை ஒரு தண்டனைக்குரிய செயல் என ஏட்டில் இருந்தாலும், பலரின் மனதிற்குள் இன்னும் அது ஆழப்பதியவில்லை என்பதே உண்மை. அதற்கு சான்றாகவே அவ்வப்போது நடைபெறும் சாதிய கொடுமைகள் தொடர்பான சம்பவங்கள் மனதை உலுக்கும் விதமாக அமைகின்றன. அந்த வகையில் தான், புதுக்கோட்டையில் அடுத்தடுத்து நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு:

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின்,  வேங்கை வயல் தெருவில் ஏராளமான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி தவித்து வந்த அந்த மக்கள் முன்னெடுத்த  நீண்டகால,  போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2016-17ஆம் ஆண்டில் வேங்கை வயல் பகுதியில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தான், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மலம்:

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்ததில் சிறுவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் பேரில், நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.

திட்டமிட்டு சதிச்செயல்?

அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக ஊர் பஞ்சாயத்து தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில், வேங்கைவயல் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர். திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என புகார்:

இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே ஆகியோர் வேங்கை வயல் பகுதிக்கு வந்தனர். அப்போது, குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாக ஊராட்சி தலைவர் மற்றும் பாதிக்கப்பட்ட பட்டியிலன மக்களிடம் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது, பேசிய பட்டியிலன மக்கள் அங்குள்ள அய்யனார் கோயிலில் தாங்கள் அனுமதிக்கப்படுவதிவில்லை என புகாரளித்துள்ளனர். இதுதொடர்பாக, ஊர்மக்களிடம் விசாரித்தபோது சாதிய பாகுபாடு எதுவும் நாங்கள் காட்டுவதில்லை எனவும், பட்டியிலன மக்கள் தான் கோயிலுக்குள் வருவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அதிரடி:

இதையடுத்து கோயிலின் சாவியை கேட்டு பெற்ற மாவட்ட ஆட்சியர், பட்டியிலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தார். இதுதொடர்பாக பேசிய பட்டியலின பெண், கடந்த 3 தலைமுறைகளாக வேங்கை வயல் கிராமத்தில் நாங்கள் வசித்து வருவதாகவும், ஆனால் இப்போது தான் முதல்முறையாக இந்த கோயிலுக்குள் வந்து இருப்பதாகவும் கூறினார். எந்த விதத்தில் எங்களை தாழ்த்தப்பட்டவர்களாக அவர்கள் கருதுகின்றனர் என புரியவில்லை. நாங்களும் படித்து சமூகத்தில் முன்னேற தொடங்கிவிட்டோம் என வேதனையுடன் தெரிவித்தார்.

இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அவை தொடர்பாகவும், குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget