Pudukkottai: மிளகாய் பொடி வீணாப்போச்சே... திருடு போன 750 பவுன் நகையை கிணற்றில் மீட்ட போலீசார்!
மீமிசல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 750 சவரன் தங்க நகை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
மீமிசல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 750 சவரன் தங்க நகை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதி அருகே உள்ள கோபாலபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். இவர் கடந்த முப்பது வருடமாக புருணையில் மளிகை கடை தொழில் நடத்தி வருகிறார். இவர் புருணையில் இருந்து அடிக்கடி விடுமுறைக்கு ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இதைத்தொடர்ந்து கொரோனா காலகட்டம் என்பதால் சில மாதங்களாக அவரால் ஊருக்கு வர முடியவில்லை. இதனால் வீடு பூட்டிக் கிடந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் அவர் உறவினர் ஒருவர் வீடு சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பகுதியில் மிளகாய் பொடி தூவி கிடந்துள்ளது. இதைப்பார்த்து சந்தேகமடைந்த அவர் கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்துள்ளது. இதனால் அவர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் பின்பக்கம் வழியாக வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 750 பவுன் நகை திருட்டு போயிருந்ததும் தெரியவந்தது.
‛இவ்வுலகை காப்பவளுக்கு இன்சூரன்ஸா?’ எக்ஸ்ப்ரி ஆன காரில் லக்ஸரி பயணம் செய்து வரும் அன்னபூரணி அம்மா!
இதுகுறித்து சாதிக்கின் உறவினர்கள் மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அங்கு வந்த மீமிசல் போலீசார் திருட்டு நடந்த இடத்தில் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் சோதனை மேற்கொண்டனர். நேற்று செவ்வாய்கிழமை டிஐஜி நேரில் சென்று விசாரனை செய்துள்ளார்.
இந்நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த கினற்றை சந்தேகத்தின் அடிப்படையில் தண்ணீரை இறைத்து பார்த்த போது கிணற்றின் உள்ளே பிளாஸ்டிக் கவரில் இருந்து நகை கண்டெடுக்கப்பட்டுளளது. கிணற்றில் நகைகளை கொண்டு சென்று போட்டது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திரைப்படம் ஒன்றில் வடிவேல் மிகவும் கஷ்டப்பட்டு மிளகாய்த்தூள் எல்லாம் தூவி நகையை திருடி எடுத்து வந்துவிடுவார். ஆனால் பின்னாலேயே போலீசார் வந்து திருடர்களையும் நகையையும் மீட்டுவிடுவர். அதேபோன்றுதான் இந்த நகையை திருடியவர் மிளகாய்த்தூள் தூவி சென்றுள்ளார். ஆனால் போலீஸ் சந்தேக புலனறிவால் நகையை கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்