புதுச்சேரி: அரசியல்னா கட் அவுட்டு.. விஜய்னா கெட் அவுட்டா? பீஸ்ட் பேனர் அகற்றம்! ஃபேன்ஸ் வாக்குவாதம்!!
விஜய் படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டதால் அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதம்
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் விஜய் படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டதால் அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதம் நடத்தியது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. வரும் 13ம் தேதி புதன்கிழமை நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அதனை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் என வழக்கம் போல திருவிழா கொண்டாடுவது போல் மாறியுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் விஜய் ரசிகர்கள் வைத்த பேனரை அகற்றியது பிரச்சனையை கிளப்பி உள்ளது.
நடிகர் விஜய் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சமீபத்தில் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிக அளவில் டிரெண்டாகின. இந்த நிலையில், புதுச்சேரி முழுவதும் நடிகர் விஜய் மற்றும் புதுச்சேரி முதல்வர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களை ரசிகர்கள் வைத்து வருகின்றனர். மேலும், விஜய்யின் பீஸ்ட் பட பேனர்களும் வைக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி: வில்லியனூர் பகுதியில் விஜய் படத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டதால் அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதம் pic.twitter.com/rVLY9W43tU
— SIVARANJITH (@Sivaranjithsiva) April 10, 2022
அரசியல் கட்சியினரின் பேனரை அகற்றாமல் எங்கள் பேனரை ஏன் அகற்றினீர்கள் லஞ்சம் வாங்குகிறீர்கள் என பீஸ்ட் படத்தின் பேனரை அகற்றிய நிலையில், விஜய் ரசிகர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வரும் 13ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் நடிகர் விஜய்யின் கட்டவுட் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் வில்லியனூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கட்டவுட்டுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் அதனை அகற்றியுள்ளனர். இதனை பார்த்த கட்டவுட் வைத்த ரசிகர்கள் அதனை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல்வாதிகளின் கட்டவுட்கள் வைக்கும் போது மட்டும் ஏன் அகற்றவில்லை அப்போது அவர்களிடம் லஞ்சம் வாங்குகிறீர்களா, எங்களிடம் சொல்லிவிட்டு தான் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
At Pondicherry #ThalapathyVijay #BeastMovie #TamilNadu #pondicherry pic.twitter.com/q7gd9pgPMc
— basheerdhoni7 (@basheerdhoni7) April 10, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்