மேலும் அறிய

வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை - கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கல்சிறுநாகலூரை சேர்ந்தவர் உமாபார்வதி (28). இவருக்கும் கோட்டையாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகனான கூலித்தொழிலாளி சிலம்பரசன் (33) என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது உமாபார்வதியின் பெற்றோர், வரதட்சணையாக 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை கொடுத்துள்ளனர். திருமணமான 3 மாதங்களிலேயே சிலம்பரசன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி உமாபார்வதியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதன் பிறகு 7 மாத கர்ப்பிணியாக இருந்த உமாபார்வதியிடம், திருமணத்தின் போது தருவதாக கூறிய மேலும் 5 பவுன் நகையை பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி கேட்டு சிலம்பரசன் துன்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அவரது தந்தை ஏழுமலை, தாய் கலியம்மாள், உறவினர் முனுசாமி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.


வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை - கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

இதனால் உமாபார்வதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இதுபற்றி கூறியுள்ளார். உடனே உமாபார்வதியை அவரது தாய் பூமாலை, கோட்டையாம் பாளையத்திற்கு அழைத்து வந்து சிலம்பரசன் மற்றும் அவரது பெற்றோரிடம் தான் செய்ய வேண்டிய சீர்வரிசைகளை உமாபார்வதியின் 9-வது மாத வளைகாப்பின்போது வழங்குவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகும் உமாபார்வதியை சிலம்பரசன் உள்ளிட்டோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் கடந்த 2014 ஆம் ஆண்டு உமாபார்வதி அதே கிராமத்தில் உள்ள தங்கராஜ் என்பவரின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பூமாலை அளித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், ஏழுமலை, கலியம்மாள், முனுசாமி ஆகியோரை கைது செய்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை - கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சிலம்பரசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், ஏழுமலை, கலியம்மாள், முனுசாமி ஆகிய 3 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சிலம்பரசன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget