பலான படத்துக்கு ரூ.16 லட்சம் - குஜராத்தில் நடந்த அட்டூழியம்!
இவர் 2019 முதல் 2020 காலம் வரை நிறுவனத்தின் பணத்திலிருந்து பல லட்சம் கையாடல் செய்துள்ளார்.
குஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்த ஒரு விநோத சம்பவத்தில் 16 லட்சம் வரை பணம் செலவழித்து 'பார்ன்' படங்களைப் பார்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜ்கோட்டில் இர்பான் ஷேக் என்பவர் நடத்தி வந்த தனியார் கிராஃபிக் டிசைன் நிறுவனத்தில் கணக்கராகப் பணியாற்றுபவர் துஷார் சேஜ்பால். இவர் 2019 முதல் 2020 காலம் வரை நிறுவனத்தின் பணத்திலிருந்து பல லட்சம் கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் பல்வேறு தகவல்கள் வெளியே வந்துள்ளது.
குஜராத் போலீசார் பகிர்ந்த தகவல்களின்படி, ‘ சேஜ்பால் ஆன்லைனில் பார்ன் படங்களைப் பார்ப்பதற்கு அடிமையானவர். அதற்காக நிறுவனத்தின் பணத்திலிருந்து 16 லட்ச ரூபாய் செலவழித்து வீடியோ பார்த்துள்ளார். அப்படி இண்டர் நெட் உபயோகித்த சமயத்தில்தான் அவருக்கு உத்திரப்பிரதேச மாவட்டம் காஜியாபாத்தை சேர்ந்த சப்னா என்கிற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து சப்னாவுக்கு அடிக்கடி சேஜ்பால் பணம் அனுப்பி வந்ததாகத் தெரிகிறது’ என்றனர்.
மற்றொரு பக்கம் சப்னாவும் சேஜ்பாலை எமோஷனலாக மிரட்டி வந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
‘சப்னாவின் எமோஷன்ல் ப்ளாக்மெயில்களால் சேஜ்பால் அவ்வப்போது பணம் அனுப்பி வந்தார். அவர் கேட்கும்போதெல்லாம் பணம் அனுப்பி வந்துள்ளார் சேஜ்பால். அதனால் இதுவரை கிராஃபிக் டிசைன் நிறுவனத்தின் கணக்கிலிருந்து 85 லட்சம் ரூபாய் வரை சேஜ்பால் சப்னாவுக்கு அனுப்பியுள்ளார்’ என போலீசார் கூறுகின்றனர்.
முன்னதாக, குஜராத்தில் அண்மையில் பெரிய அளவிலான போதைப்பொருள் தடுப்பு வேட்டை நடந்ததும் குறிப்பிடத்தக்கது. முத்ரா அதானி துறைமுகத்தில் சுமார் 3000 கிலோ மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை தடுப்புப் பிரிவினர் கைப்பற்றினர்.
கடந்த செப்டம்பர் 22 அன்று, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இரண்டு கண்டெய்னர்கள் முழுவதும் சுமார் 2988 கிலோ எடை அளவில் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் ஏற்றுமதி நாடு என அறியப்படுகிறது. எனினும் கடந்த மாதம், ஆப்கானிஸ்தான் அரசைத் தாலிபான் அமைப்பினர் கைப்பற்றிய போது, போதைப் பொருள் விற்பனையைத் தடை செய்யவுள்ளதாக அறிவித்தனர். எனினும் அந்தத் தடை எப்படிப்பட்டது என்பதைத் தலிபான்கள் அறிவிக்கவில்லை.
குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக, குஜராத் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வருவாய் நுண்ணறிவுத் துறை இயக்குநரகம் கடந்த செப்டம்பர் 15 அன்று, குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு வரும் கண்டெய்னர்களில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவலைப் பெற்றதன் அடிப்படையில், சோதனை செய்ததில் சுமார் 2988 கிலோ ஹெராயின் போதைப் பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.
பணம் களவாடப்பட்ட விவகாரத்தில் சேஜ்பால் உட்பட மூவர் தற்போது குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.