ஐ.சி.எஃப்-ல் பயங்கரம் : இளைஞரின் மூக்கை அறுத்த மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு..!
இளைஞரின் மூக்கை அறுத்துவிட்டு தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு..
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த 21 வயதான ஆதித்யா என்ற இளைஞர் ஐசிஐசிஐ பகுதியில் வில்வித்தை பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் ஆதித்யா என்ற அந்த இளைஞர் பயிற்சி முடிந்து வெளியே வந்த நிலையில் அவரை வழிமறித்து ஒரு மர்ம நபர் சுமார் 20 நிமிடம் அவருடன் பேசியுள்ளார்.
பின்பு அந்த மர்ம நபர் திடீர் என்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆதித்யாவின் தலை மற்றும் மூக்கு பகுதியை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் ஆதித்யாவின் மூக்கு பகுதி துண்டானது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து ஆதித்யாவை தாக்கி சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயிற்சி முடிந்து வெளியில் வந்த நபரிடம் சுமார் 20 நிமிடம் உரையாடியாக பிறகு அவரது மூக்கை அறுத்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலுக்கு பின்னுள்ள காரணத்தையும், அந்த மர்ம நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.