‛நோ மேரேஜ்... அப்போ டேமேஜ்... ’ காதலி அந்தரங்க போட்டோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்த இளைஞர் கைது!
காதலித்த பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த 25 வயதான அஜ்மத் பைசல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில், செங்கல்பட்டு திருமணியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் உடன் பணியாற்றியுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தநிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அஜ்மல் இளம்பெண்ணின் வீட்டில் தங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கொண்ட வாலிபர், இளம்பெண் வீட்டில் குளிக்கும்போது, உடைமாற்றும்போது, தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
இதையறிந்த பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே,இளம்பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அஜ்மத்பைசல் கட்டாயப்படுத்தி உள்ளார். தொடர்ந்து,பெண் வீட்டார் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அஜ்மத்பைசல், தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், உங்கள் பெண்ணை ஆபாசமாக எடுத்த வீடியோவை முக நூல் மற்றும் சமூக வலைதளங்களில் பைசல் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
மேலும் படிக்க :சிவசங்கர் பாபா விட்டதை பிடிக்க நினைத்து... இருந்ததை இழந்த அன்னபூரணி அரசு அம்மா!
அதனை, இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத இளம்பெண்ணின் குடும்பத்தினர் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் அஜ்மல், இளம்பெண்ணின் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி நடத்திய விசாரணையில் இளம்பெண்ணின் வீடியோவை அந்த இளைஞர் வெளியிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அஜ்மத் பைசல் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
‛அர்ஜூன் சாரிடம் நான் சொன்னது... ஒளிபரப்பாகவில்லை...’ - சர்வைவர் நந்தா பேட்டி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்