மேலும் அறிய

செங்கல்பட்டு: 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. சிக்கிய 15 வயது சிறுவன்.!

பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி திவ்யா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) திவ்யாவிற்கு தற்போது 50 வயது ஆகிறது. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்குச் சென்று தங்களுடைய குழந்தைகளை காப்பாற்றி வருகின்றனர். 

செங்கல்பட்டு: 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. சிக்கிய 15 வயது சிறுவன்.!
 
இவர்கள் குடிசையில் வசித்து வருகிறார்கள். நேற்று இரவு கணவன்- மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கினார்கள். இவர்களது வீட்டின் அருகில் சிறிய மலைபோன்ற குன்று பகுதி உள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த குன்று பகுதியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து ராமுவின் மூத்த மகன் எழுந்து கதவை திறந்து நாய் குரைக்கும் இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது குன்று பகுதியில் திவ்யா அரைகுறை ஆடைகளுடன் கிடந்தார். அவரது அருகே 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் இருந்தான். திவ்யா மகனை பார்த்ததும் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடினான்.

செங்கல்பட்டு: 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. சிக்கிய 15 வயது சிறுவன்.!
 
இதையடுத்து திவ்யாவின் மகன் கூச்சலிட்டான். இதனால் அக்கம் பக்கம் வசித்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். திவ்யாவை  பார்த்தபோது அவருக்கு சுய நினைவு இல்லை. அவர் இறந்த நிலையில் காணப்பட்டார். இதனால் பதற்றமடைந்த அவருடைய கணவர் மற்றும் அருகில் இருந்த உறவினர்கள் உடனடியாக, இதுகுறித்து திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மேலும் கிராம மக்கள் தப்பி ஓடிய சிறுவனை பிடிப்பதற்காக பல்வேறு இடங்களில் தேடியும் வந்தனர்.
 

செங்கல்பட்டு: 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. சிக்கிய 15 வயது சிறுவன்.!
 
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார். மேலும், தப்பியோடிய நபர் யார் என்று விசாரித்து வந்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என்பதும், மானாமதியில் உள்ள காயலான் கடையில் வேலை செய்யும் இச்சிறுவன், திவ்யா இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அவரை பாலியல் வன்கொடுமை  செய்ததும், தடுத்த திவ்யாவை சிறுவன் தாக்கியதால் அவர் இறந்ததும் தெரியவந்தது.

செங்கல்பட்டு: 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. சிக்கிய 15 வயது சிறுவன்.!
 
இதையடுத்து, தலைமறைவான 15 வயதுடைய சிறுவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறார் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணை 15 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை  செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மேலும் செய்திகளை காணABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
Embed widget