மேலும் அறிய

Pocso On BJP Shah : பைக் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை.. 15 வயது சிறுமியிடம் அத்துமீறிய பாஜக நிர்வாகி மீது போக்சோ வழக்கு

பைக் வாங்கிதருவதாக கூறி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பைக் வாங்கிதருவதாக கூறி 15 வயது மகளை பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளி மாணவியின் தந்தை அளித்த புகாரின் கீழ் நடவடிக்கை எடுத்ததன் பெயரில் பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

யார் இவர்..? என்ன நடந்தது..? 

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். எம்.எஸ்.ஷா சமீபகாலமாக பாஜக தலைவர்களோடு மிக நெருக்கமாக இருந்து வந்துள்ளார் என்றும், இது தொடர்பான படங்களையும் தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்தநிலையில் பாஜக பிரமுகரான எம்.எஸ்.ஷா மீது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த மனுவில், தனது மகளின் செல்போனில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் இருந்து வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்து என்ன நடந்தது என்பது குறித்து தனது மகளிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி, தன் அம்மா, சிறுமியை பள்ளிக்கு செல்ல விடாமல் பாஜக பிரமுகரிடம் அழைத்து சென்று விட்டுள்ளார் என சொல்லியுள்ளார். தொடர்ந்து அந்த பாஜக நிர்வாகியும் அந்த சிறுமியை தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துசென்று தனியாக இருந்துவந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இது போதாதென்று, வாட்ஸ் அப் வாயிலாக நான் கூப்பிடும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தையை கூறி அழைத்துசென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். தொடர்ந்து, வேறு மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று தனியார் சொகுசு விடுதியில் தங்கியும், பாலியல் வன்கொடுமை செய்து அதற்கு பதிலாக புதிய ஆடைகள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார்.

போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு:

பாஜக பிரமுகர் எம்.எஸ்.ஷா முதலில் தனது மனைவியிடம், தங்களது கடனை அடைத்து விடுவதாக கூறி திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததோடு மனைவி மூலமாக மகளையும் அழைத்துசென்று பாலியல் துன்பறுத்தல் அளித்துள்ளார். இதற்கு முழுமையாக தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார் என அந்த புகார் மனுவில், மாணவியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்

இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்.எஸ். ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் ஆகிய இருவர் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4),  12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பாஜக நிர்வாகி எம்.எஸ் ஷா, கல்லூரி நடத்திவரும் நிலையில், அவர் மீது பள்ளி மாணவியின் தந்தை அளித்த புகாரின் கீழ் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது மதுரை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Embed widget