மேலும் அறிய

நெல்லையில் பெட்ரோல் பங்க் ஊழியர் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக்கொலை - மக்கள் அதிர்ச்சி

திருநெல்வேலியில் பெட்ரோல் பங்க் ஊழியர் அதிகாலையில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து பெருமாள். இவர் அருகில் உள்ள கருங்குளம் பகுதியில் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் நெல்லை ரெட்டியார்பட்டி மலை அருகே சிவந்திபட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

வெட்டிப் படுகொலை:

அப்போது அங்கு வந்த   கும்பல் முத்து பெருமாளை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்து பெருமாள் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார்.  மேலும் அவர் அணிந்திருந்த தலைக்கவசம் முழுவதும் இரத்தமாக ஒருபுறமும், அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஒருபுறமும் கிடந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து வந்த நெல்லை பெருமாள்புரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அங்கிருந்து சிறிது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முன்னீர்பள்ளம் என்ற பகுதியில் கையில் இரத்தம் படித்த அரிவாளுடன் சுற்றி திரிந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அப்போது அவர்களை விரட்டி பிடித்த போது 2 பேர் பிடிபட்டுள்ளனர். ஒருவர் தப்பியோடியுள்ளார். தப்பியோடிய நபர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரணம் என்ன?

குறிப்பாக முத்து பெருமாள் எதற்காக கொலை செய்யப்பட்டார். ஏதேனும் முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் அரிவாளுடன் சுற்றி திரிந்து பிடிபட்டவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழை வெள்ளத்தால்  நெல்லை, தூத்துக்குடியில் மக்கள் பலர் வீடுகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து அதிலிருந்து மீண்டு வர முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கும் சூழலில் இது போன்ற  கொலை சம்பவங்களால் மேலும் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.  அதிகாலையில் வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget