Watch video: ஜெய்பீம் பட பாணியில் பொய் வழக்கு?: மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட பழங்குடியின மக்கள்!
ஜெய்பீம் பட பாணியில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் மீது பொய்யான வழக்கு போட்டு போலீசார் கைது செய்தவரை விடுவிக்க கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் முருகேஷிடம் மனு அளித்தனர்
![Watch video: ஜெய்பீம் பட பாணியில் பொய் வழக்கு?: மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட பழங்குடியின மக்கள்! Petition to the Collector seeking the release of the detainee of the oppressed tribal people who were charged with false theft in the style of Jaybeam film Watch video: ஜெய்பீம் பட பாணியில் பொய் வழக்கு?: மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட பழங்குடியின மக்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/24/f817e20408d4668ef6702200a334ff5d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்கா புலிவாந்தல் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த ராஜகிளி அவரது உறவினர் கார்த்திக் ஆகிய இருவரையும் நள்ளிரவில் காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்று விட்டதாகவும், இதுகுறித்து ராஜா கிளியின் மனைவி சங்கீதா மற்றும் அவரது உறவினர்கள் காஞ்சிபுரம் காவல் நிலையம், பெருநகர காவல் நிலையங்களில், சென்று கேட்ட பொழுது காவல்துறையினர் அவ்வாறு தங்கள் யாரும் அழைத்து வரவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிக்கு முடி வியாபாரம் செய்து பிழைத்து வரும் தங்களை காவல்துறையினர் அடிக்கடி வந்து பொய்யான பல திருட்டு வழக்குகளில் சம்பந்தப்படுத்தி தங்கள் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் செல்வதாகவும்,
மேலும் திருட்டு நகைகளுக்கு ஈடாக தங்கள் வைத்துள்ள அரை சவரன், ஓரு சவரன் என உள்ள பொருட்கள் அனைத்தையும் அடாவடித்தனமாக காவல்துறையினர் பறிமுதல் செய்து கொண்டு செல்வதாகவும், மேலும் அருகில் உள்ள அடுகுகடைக்கு அழைத்து சென்று எந்த கடையில் நகைகளை அடகு வைத்துள்ளீர்கள் என்று கூறி எங்களுடைய கணவரை அடிக்கடி வந்து காவல்துறையினர் தொந்தரவு செய்கின்றனர். பின்னர் செய்யாத குற்றத்திற்கு தங்களை செய்ததாக கூறுகின்றனர். நாங்கள் அனைவரும் உழைத்து தான் உணவு அருந்துவோம் இது போன்று திருடி சாப்பிட மாட்டோம், அப்படியே அன்று எங்களுக்கு வருமானம் இல்லை என்றால் உணவு இன்றி பட்டினியாக இருப்போமே தவிர எங்கும் திருடியது இல்லை, ஆனால் மனசாட்சி இல்லாமல் காவல்துறையினர் எங்களுடைய கணவர்களை பொய்யான வழக்கை போட்டு அடிக்கடி வந்து அழைத்துச் செல்கின்றனர். இதன் காரணமாக பழங்குடியின மக்களான தங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் உள்ள பெண்களும்,குழந்தைகளும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றோம்.
தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் மீது பொய்யான வழக்கு போட்டு போலீசார் கைது செய்தவரை விடுவிக்க கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் முருகேஷிடம் மனு அளித்தனர்.@imanojprabakar @SRajaJourno @abpnadu pic.twitter.com/C2Iedrhs8V
— Vinoth (@Vinoth05503970) March 24, 2022
ஜெய் பீம் திரைப்பட பாணியில் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளை முடித்து வைக்க பொய்யான வழக்கு போட்டு தங்களின் கணவர்களையும், உறவினர்களையும் கைது செய்யும் காவல்துறையினர் நடவடிக்கையை தடுக்கக் கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி இன மக்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் என ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் மனு அளித்து தங்களின் கணவரை விடிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மனுவினை பார்த்த ஆட்சியர் நான் இதைப்பற்றி காஞ்சிபுரம் காவல்துறையினரிடம் பேசுகிறேன் என்று தெரிவித்து சென்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியதால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)