Perambalur : பெரம்பலூரில் ரூ.11 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
பெரம்பலூரில் ரூ.11 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது, முக்கிய குற்றவாளியான ஜெயபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மோசடிகள் அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. மேலும் பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை நம் அனைவருக்கும் உள்ளது. ஆனால் சரியான முறையில் பணத்தை முதலீடு செய்து சம்பாதிக்க வேண்டும். ஆனால் உடனடியாக குறுகிய காலத்தில் பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என மனநிலையோடு பொதுமக்கள் உள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பலர் தனது நிறுவனத்தின் முதலீடு செய்தால் ஆறே மாதத்தில் அதிக அளவில் பணத்தை பெறலாம் என்றும், 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் 3 மாதத்தில் 5 லட்ச ரூபாய் தருகிறோம், போன்று பல்வேறு விதமான ஆசை வார்த்தைகளை கூறி பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றி மோசடிகள் நிகழ்ந்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இருந்தாலும் மோசடிகளை குறித்து பலமுறை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், இன்னும் சிலர் அதை கருத்தில் கொள்ளாமல் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள் என்ற செய்தி தான் வேதனை அளிக்கிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்