மேலும் அறிய

உனக்கு ரெண்டு புருஷனா? : தகாத முறையில் பேசி, பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் மீது புகார்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசு பள்ளியில் மாணவியிடம் தவறாக நடந்ததாக மாணவியின் பெற்றோர் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பள்ளி வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசு பள்ளியில் மாணவியிடம் தவறாக நடந்ததாக மாணவியின் பெற்றோர் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பள்ளி வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நடுக்குப்பம் சுற்றுவட்டார பகுதியான வண்டிப்பாளையம், நாணக்கல்மேடு வண்டிப்பாளையம், புதுப்பாக்கம், கே என் பாளையம், திருக்கனூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவ மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

கொரோனா தாக்கத்திற்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கன மழையின் காரணமாகவும் புயல் எச்சரிக்கை காரணமாக வும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

உனக்கு ரெண்டு புருஷனா? : தகாத முறையில் பேசி, பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் மீது புகார்

நடுக்குப்பம் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகவும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வரும் பழனிவேல் என்பவர் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இச்சூழலில் பள்ளியில் உள்ள பெண் பிள்ளைகள் நெற்றியில் பொட்டு வைத்து வருவதை பார்த்து பலமுறை இவர் கண்டித்திருக்கிறார். நீங்கள் எல்லாம் போட்டு வைக்கக்கூடாது என ஆசிரியர் பழனிவேல் கூறியுள்ளார். இந்த நிலையில் நடுக்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பயின்று வரும் ஒரு மாணவி இன்று வீட்டில் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார். எதற்காக செல்ல மாட்டாய் என அந்த மாணவியின் பெற்றோர் விசாரித்தனர்.

உனக்கு ரெண்டு புருஷனா? : தகாத முறையில் பேசி, பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் மீது புகார்

அப்பொழுது கூறிய அந்த மாணவி கூறியதாவது : எங்களுக்கு பாடம் நடத்தி வரும் வணிகவியல் ஆசிரியர் பழனிவேல் என்பவர் என்னை பார்த்து நெற்றியில் இருக்கும் பொட்டை பார்த்து அந்த ஆசிரியர், உனக்கு ஒரு பொட்டு இருந்தால் ஒரு புருஷன் இரண்டு போட்டு வைத்திருக்கிறாய் உனக்கு என்ன இரண்டு புருஷனா என கூறி என்னை உடம்பில் தவறான முறையில் தொட்டார். எனக்கு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என கூறி அழுதுள்ளார்.

உனக்கு ரெண்டு புருஷனா? : தகாத முறையில் பேசி, பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர் மீது புகார்

இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு மாணவியை அழைத்து வந்தனர். சம்பவம் குறித்து அசுரகுலம் பெற்றோர்கள் தெரிவித்தனர் புகாராக எழுதி சம்பந்தப்பட்ட உதவி தலைமையாசிரியர் பழனிவேலை வேலை இடமாற்றம் செய்ய வேண்டும் மற்றும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என புகார் அளித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அப்பகுதியில் இருந்த மக்கள் மற்றும் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வரத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மரக்காணம் வட்டாட்சியர் மற்றும் கோட்டகுப்பம் காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget