வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை; விழுப்புரத்தில் மூதாட்டி கைது
விழுப்புரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து பல வருடங்களாக கஞ்சா கடத்தி விற்பனை செய்த திருநெல்வேலியை சார்ந்த மூதாட்டி கைது
திருநெல்வேலியை சார்ந்த மூதாட்டி விழுப்புரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து பல வருடங்களாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வது தெரியவந்ததையடுத்து மயிலம் போலீசார் மூதாட்டியை கைது செய்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேயுள்ள கூட்டேரிப்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஏஎஸ்பி அபிஷேக் குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் மயிலம் காவல் ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீசார் கூட்டேரிப்பட்டு பகுதி ரயில்வே மேம்பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூதாட்டியை அழைத்து போலீசார் விசாரனை செய்த போது கையில் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் மூதாட்டியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை செய்ததில் திருநெல்வேலியை சார்ந்த விஜயா என்பதும் இவர் விழுப்புரம் நகர பகுதியான கே கே ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து மயிலம் போலீசார் வீட்டில் பதுக்கிய 8 கிலோ கஞ்சா என மூதாட்டியிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூதாட்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். விழுப்புரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கடந்த 8 வருடங்களுக்கு மேலாக மூதாட்டி கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வது விசாரனையில் தெரியவந்துள்ளது.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ஏ.டி.எஸ்.பி., அபிஷேக் குப்தா கூறியதாவது :- தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் கஞ்சா போதைக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தற்போது கஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விஜயாவிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் மீது பண்ருட்டி போலீசில் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிவித்தார். பின்னர் மயிலம் போலீசார் விஜயாவின் மீது வழக்குப்பதிந்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.