மேலும் அறிய

அரியலூரில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது

’’குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து சிறுமிக்கு கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது’’

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தா (30). இவர், 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து சிறுமியை, அவரது பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து சென்ற சாந்தா, அந்த சிறுமியை, கீழப்பழுவூரை சேர்ந்த சந்திரா (30) என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சந்திரா, அந்த சிறுமியை கீழப்பழுவூர், வி.கைகாட்டி, செந்துறை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு அழைத்துச்சென்று, சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிலருடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார் என்பதும், இதற்கு சாந்தா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
 
அரியலூரில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது
 
இதையடுத்து சாந்தா, சந்திரா மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தஞ்சை கீழவாசல் பாம்பாட்டி தெருவை சேர்ந்த முருகேசன் மகன் வினோத் (29), வி.கைகாட்டி முத்துவாஞ்சேரி சாலை உரக்கடை தெருவை சேர்ந்த செந்தில் மகன் பிரேம் (29), நாகமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் பாலு என்ற பாலச்சந்தர் (27), செந்துறை மணப்பத்தூர் மேலத்தெருவை சேர்ந்த தங்கும் விடுதி மேலாளர் தனவேல் (58), பாலியல் தொழிலில் சந்திராவுக்கு உதவியதாக கீழப்பழுவூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த வெற்றிக்கண்ணன் (37), திருமானூர் தெற்கு தெருவை சேர்ந்த தெய்வீகன் (49), சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு தான் பராமரித்து வரும் வணிக வளாகத்தில் இடம் கொடுத்ததாக கீழப்பழுவூரை சேர்ந்த ராஜேந்திரன் (62) ஆகிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய தனியார் தங்கும் விடுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவரையும், தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் பாலாஜி என்பவரையும் என 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே அந்த சிறுமி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
 
அரியலூரில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது
 
மேலும் சிறுமி உடல் நலிந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிறுமியின் பெற்றோர், மிகுந்த மன வேதனையில் உள்ளனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் காவல்துறை துணை சூப்பிரண்டு கலைகதிரவன், துணை சூப்பிரண்டு (பயிற்சி) சங்கர் கணேஷ் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுமதி, உடையார்பாளையம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் உள்ளிட்ட காவல் துறையினர் மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து சிறுமிக்கு கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, சிறுமியை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படைய செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget