Watch video: தந்தூரி சிக்கனுக்கு மையோனைஸ் கிடையாதா? - சினிமாவை மிஞ்சிய சண்டை....அதிர்ச்சி வீடியோ..!
தந்தூரி சிக்கனுக்கு மையோனைஸ் தர மாட்டீர்களா? நெல்லையில் போர்க்களமான ஹோட்டல் - வீடியோ காட்சிகளால் பரபரப்பு
நெல்லை புதிய பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் உள்ள பிரதான நெடுஞ்சாலையில் கசாலி என்ற பெயரில் ஹோட்டல் உள்ளது. இங்கு மணிகண்டன் சிவபெருமாள் ஆகிய இருவர் இரவு தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்ட சென்றுள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து அரை அளவுக்கும் குறைவாக ஆர்டர் செய்து இருவரும் சாப்பிட்டுள்ளனர். அப்போது தான் வாங்கிய 1/4 அளவு தந்தூரி சிக்கனுக்கு மையோனைஸ் கொடுக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடை ஊழியர்கள் அரை என்ற அளவில் தந்தூரி சிக்கன் வாங்கினால் மட்டுமே அதற்கு மைனஸ் தரப்படும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
அப்போது கடை ஊழியருக்கும் உணவருந்த சென்றவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றவே சிவபெருமாள் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து கடை ஊழியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடையில் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்கள் மற்றும் உணவருந்த வந்தவர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மேலும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு மாற்றி மாற்றி தாக்கிக் கொள்ளும் காட்சிகளை செல்போனில் ஒருவர் பதிவு செய்துள்ளார். அவை தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் சூழலில் அதில் பதிவான காட்சிகள் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் போன்று ஹோட்டல் முழுவதுமாக போர்க்களமாக மாறி இருப்பது தெரிய வருகிறது.
சிக்கனுக்கு மைனஸ் தராததால் நெல்லையில் உணவகம் ஒன்றில் நடந்த அடிதடி கலவரம்... ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு.. வைரல் வீடியோ... @abpnadu @SRajaJourno pic.twitter.com/MjKJQAvR10
— Revathi (@RevathiM92) August 4, 2022
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததோடு பஷீர், யூசுப், சிராஜ்தீன், தாஹிர், கனி உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் நடைபெற்ற ஹோட்டல் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவத்தால் காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஹோட்டல் அருகே பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. சிக்கனுக்கு மையோனைஸ் தராததால் ஹோட்டலை போர்க்களமாக மாற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வீடியோ காட்சிகளால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்