Crime : கடற்கரையில் தோழியுடன் பேச்சு.. இளைஞரிடம் ரூ. 40,000 பறிப்பு... மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு....
நீலங்கரையில் வாலிபரிடம் 40 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றவர்களை போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தேடி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த 25 வயதான வாலிபர் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது தோழியுடன் நீலாங்கரை கடற்கரை நேற்று முன் தினம் சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் அமர்ந்து தனது தோழியுடன் பேசி கொண்டிருந்துள்ளார்.
பணம் பறிப்பு:
அப்போது, கடற்கரைக்கு திடீரென வந்த மரம் நபர்கள் 3 பேர், அவர்கள் 2 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதற்கு, தன்னிடம் பணம் இல்லை என வாலிபர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வாலிபரை மர்ம நபர்கள் தாக்கி, பையில் வைத்திருந்த 600 ரூபாயை பறித்தனர்.
பின்னர் மொபைலில் உள்ள பணம் பரிமாற்றம் செய்யும் செயலி வழியாக ரூ. 40 ஆயிரத்தை, அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.இதையடுத்து, பாதிக்கப்பட்ட வாலிபர் , காவல்துறையினரிடம் புகாரளித்தார்.
View this post on Instagram
விசாரணை:
புகாரை அடுத்து, சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தனியாக இருந்த இருவரிடம், தொழில்நுட்ப ரீதியாக 40 ஆயிரத்தை பணம் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: Crime : 100 முறை ஜெயிலுக்கு சென்ற பலே திருடன் ; காவல் துறையினரை அதிர வைத்த வாக்குமூலம்
Also Read:வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது - திண்டிவனத்தில் பரபரப்பு