மேலும் அறிய
கட்டிப்போட்டு கொள்ளையடிக்கும் ஹைவே கும்பல்..! தட்டி தூக்கியது செங்கல்பட்டு காவல்துறை
மதுராந்தகம் அருகே வீட்டில் புகுந்து வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு 12 சவரன் நகையை கொள்ளையடித்த சென்ற ஹைவே கொள்ளையர்கள் 8 பேரை அச்சரப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
![கட்டிப்போட்டு கொள்ளையடிக்கும் ஹைவே கும்பல்..! தட்டி தூக்கியது செங்கல்பட்டு காவல்துறை near Madurantakam and tied up the occupants of the house and looted 12 razor necklaces Eight highway robbers arrested by Acharapakkam police கட்டிப்போட்டு கொள்ளையடிக்கும் ஹைவே கும்பல்..! தட்டி தூக்கியது செங்கல்பட்டு காவல்துறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/879b26d9a3f55894116fdc22743a6a6e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கைது_செய்யப்பட்ட_கொள்ளையர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள கடமலைபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் கடந்த 12ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபோது இரவில் திடீரென முகமூடி அணிந்து இருந்த அடையாளம் தெரியாத 9 மர்ம நபர்கள், ஜெகநாதன் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும், கத்தியை காட்டி மிரட்டியதோடு அவர்கள் அனைவரையும் கட்டிப்போட்டு அவர்கள் அணிந்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
![கட்டிப்போட்டு கொள்ளையடிக்கும் ஹைவே கும்பல்..! தட்டி தூக்கியது செங்கல்பட்டு காவல்துறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/3f7e535f5940da3d7cc697990c6215de_original.jpg)
இது குறித்து ஜெகநாதன் உடனடியாக அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உடனடியாக கொள்ளையர்களை கைது செய்ய மதுராந்தகம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரத் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து 30க்கும் மேற்பட்டோர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் அச்சரபாக்கம் பகுதியிலேயே சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள், இதேபோல் மற்றொரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்தில் போலீசார் அங்கு வாகன சோதனை மேற்கொண்டனர்.
![கட்டிப்போட்டு கொள்ளையடிக்கும் ஹைவே கும்பல்..! தட்டி தூக்கியது செங்கல்பட்டு காவல்துறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/07da1c6de815fa7f235a06f97b0074bd_original.jpg)
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 1.கேசவன் 2.பிரபு 3.சசிகுமார் 4.முகமது அப்துல்லா 5.அருள்முருகன் 6.ராஜா கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 7.சதீஷ்குமார் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய 8 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஒப்புக்கொண்டனர்.
![கட்டிப்போட்டு கொள்ளையடிக்கும் ஹைவே கும்பல்..! தட்டி தூக்கியது செங்கல்பட்டு காவல்துறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/429fb27ef431a1649bc4973839af0aef_original.jpg)
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலும் தமிழகத்தில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் எட்டு பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![கட்டிப்போட்டு கொள்ளையடிக்கும் ஹைவே கும்பல்..! தட்டி தூக்கியது செங்கல்பட்டு காவல்துறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/29/823019ea45eb62f3cbc82feb46c55393_original.jpg)
கொள்ளை அடிக்கப்பட்ட 12 சவரன் தங்க நகை 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய 10 செல்போன்கள், கத்தி, இருசக்கர வாகனம், சொகுசு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்து விசாரணைக்கு பின் அவர்களை சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion