மேலும் அறிய

நீட் தேர்வுக்கு கட்டாயப்படுத்திய தாய்; கழுத்தை நெரித்து கொன்ற மகள்!

நீட் தேர்வுக்குத் தயாராகக் கட்டாயப்படுத்திய்யதால் விரக்தியடைந்த மகள், தனது தாயைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்குத் தயாராகக் கட்டாயப்படுத்திய்யதால் விரக்தியடைந்த மகள் தனது தாயைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை ஐரோலி செக்டார்- 7 பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் இருக்கின்றனர். மகளை மருத்துவராக்க வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாக இருந்துள்ளது. மகளுக்கு மருத்துவக் கனவு இல்லை. ஆனால், தம்பதி மகளின் கருத்துகளுக்கு செவிகொடுக்கவில்லை. 15 வயதே நிரம்பிய மகளை, இப்போதிருந்தே நீட் தேர்வுக்கு ஆயத்தமாகு எனக் கூறி நீட் பயிற்சி மையத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி அந்த சிறுமி செல்போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க, இதை அவளது தந்தை கண்டித்துள்ளார். படிக்காமல் மொபைல் ஃபோன் பார்க்கிறாயே எனக் கடிந்துள்ளார். இதனால் சிறுமி மன உளைச்சலுக்கு உள்ளானார். அப்பா, அம்மாவிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

இதையடுத்து அங்கு சென்ற தாய், வீட்டுக்கு வரும்படி மகளை அழைத்தார். ஆனால் சிறுமி வீடு திரும்ப மறுத்துள்ளார். நீ்ட் தேர்வுக்கு படிப்பதற்காக கட்டாயப்படுத்துவதால் தான் வெறுப்படைந்து இருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், "என்னை நீங்கள் கட்டாயப்படுத்தி நீட் தேர்வுக்குப் படிக்க வைக்கிறீர்கள் எனப் போலீஸில் புகார் அளித்துவிடுவேன்" என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தாய், மகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாரிடம் விவரத்தை தெரிவித்தார். போலீஸார் சிறுமி மற்றும் பெற்றோருக்கு மனநல ஆலோசனை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் கடந்த 30-ஆம் தேதி சிறுமியின் தாயின் போனில் இருந்து அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் தகவல் ஒன்று சென்றது. அதில் 'நான் விடைபெறுகிறேன்' என்று கூறப்பட்டு இருந்தது. 

அந்தத் தகவல் பறந்த சிறிது நேரத்திலேயே, சிறுமி தந்தைக்கு போன் செய்து, "அப்பா, ரொம்ப நேரமா அம்மா கதவைத் திறக்க மறுக்கிறார். எனக்கு பயமாக இருக்கிறது" என்று கூறினாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்தவர் உடனடியாக உறவினருக்கு போன் செய்து வீட்டுக்குச் சென்று பார்க்கும்படி தெரிவித்தார். உறவினர் அங்கு சென்று பார்த்தபோது, வெளிப்புறமாக வீடு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அந்த பெண் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் பெண்ணின் கழுத்தில் கராத்தே பெல்ட் சுற்றியபடி இருந்தது.

இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்தனர். உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பெண்ணின் தலையில் காயம் இருப்பதும், கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. ஏற்கெனவே தாயும், மகளும் காவல்நிலையத்துக்கு வந்ததும், அவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதும் போலீஸார் நினைவில் பொரிதட்டியது.
சிறுமியிடம் லாவகமாகப்  பேச்சுக்கொடுத்து நடந்த விவரத்தை கூறும்படி கேட்டனர். அப்போது தாயைக் கொலை செய்து விட்டு, உண்மையை மறைக்க முயன்றதாக சிறுமி ஒப்புக்கொண்டார்.

சிறுமி கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்:

"அன்றைக்கு நானும், அம்மாவும் தான் வீட்டில் இருந்தோம். அப்போ ஆஃபீஸ் போய்விட்டார். அப்போது அம்மாவுக்கும் எனக்கும் படிப்பு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அம்மா, ஆத்திரப்பட்டு உச்சத்தில் கத்தினார். கத்தியை எடுத்துவந்து மிரட்டினார். எங்கே என்னைக் கொலை செய்துவிடுவாரோ என்று எனக்குப் பயம் வந்துவிட்டது. அம்மா கிட்ட வந்தபோது அவரைத் தள்ளிவிட்டேன். அவர் பின்னால் விழுந்தார். அருகிலிருந்த சோஃபாவில் அம்மாவின் தலை முட்டியது. அம்மா அப்படியே மயங்கிப் போனார். எங்கே எழுந்தவுடன் தள்ளிவிட்டதற்கும் சேர்த்து கோபப்படுவாரோ என்று அச்சம் ஏற்பட்டது. அதனால், அம்மாவை கொலை செய்துவிடலாம் என்று தோன்றியது. கராத்தே பெல்ட்டை எடுத்து அம்மாவின் கழுத்தை நெரித்துவிட்டேன். அப்புறம் நானே அப்பாவுக்கு அம்மா ஃபோனிலிருந்து மெசேஜ் அனுப்பினேன். அம்மா கதவைத் திறக்கவில்லை என்று கூறினேன்" என்று சிறுமி கூறினார்.

நீட் தேர்வுக்கு கட்டாயப்படுத்திய தாய்; கழுத்தை நெரித்து கொன்ற மகள்!

சிறுமியின் வாக்குமூலம் அதிர்ச்சியளிப்பதோடு பெற்றோரின் நிர்பந்தம் எந்த அளவுக்கு ஒரு குழந்தையின் ஆத்திரத்தைத் தூண்டியிருக்கிறது என்பது அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. சிறுமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மீதான குற்றம் உறுதியானால் அவர் கூர்நோக்குப் பள்ளிக்கு அனுப்பபடுவார்.

வெறுப்பதை நீங்கச் சொல்லு..

பட்டாம்பூச்சி போல் சிறகடித்து வாழ வேண்டிய காலக்கட்டத்தில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் செல்லவிருக்கிறாள் இந்தச் சிறுமி. இதற்கு முக்கியக் காரணம் பெற்றோர் தான். அவர்கள் மட்டும் சிறுமியை நிர்பந்திக்காவிட்டால் இப்படியொரு சம்பவம் நடந்திருக்காமல் இருந்திருக்கலாம்.
பிடித்ததை வாங்கச் சொல்லு.. வெறுப்பதை நீங்க சொல்லு.. என்ற பாணியில் உங்களின் குழந்தைகளை வாழ விடுங்கள். மருத்துவம் மட்டுமே படிப்பல்ல. கல்வியில் மட்டுமல்ல வேறு எந்த விஷயத்திலும் குழந்தைகளை நிர்பந்திக்காதீர்கள். "குழந்தைகள் எப்போதும் கட்டளைகளை ஏற்று நடக்க மாட்டார்கள், மாறாக அவர்கள் நம்மைப் பின்பற்றுவார்கள். இந்த குறிப்பிட்ட வழக்கில் சிறுமி தனது தாயின் கோபத்தை, ஆத்திரத்தை, கொலை மிரட்டல் குரல்களைப் பார்த்து அதிர்ந்து போய் கடைசியில் அதையே தானும் பின்பற்றியுள்ளார்" எனக் கூறுகிறார் மனநல நிபுணர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget