மேலும் அறிய

‘நீ பெண்ணே கிடையாது’....முதல் இரவில் புதுமணப்பெண்ணிடம்  மிருகத்தனமாக நடந்த கணவர் கைது

நாகை அருகே திருமணமான முதல் இரவு அன்று பெண்ணிடம்  மிருகத்தனமாக நடந்து கொண்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்

நாகை அருகே திருமணமான முதல் இரவு அன்று  ‘நீ பெண்ணே கிடையாது’ என மணப்பெண்ணிடம்  மிருகத்தனமாக நடந்து கொண்டதால், பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மாப்பிள்ளையை மகளிர் காவல் நிலையத்தில் கைது செய்யவில்லை என எஸ்பி அலுவலகத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர்.

‘நீ பெண்ணே கிடையாது’....முதல் இரவில் புதுமணப்பெண்ணிடம்  மிருகத்தனமாக நடந்த கணவர் கைது

கடந்த 27ம் தேதி திருமணம்:

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள தொழுதூர் உச்சி மேட்டுத்தெருவை சேர்ந்த பிச்சையன் மகன் ராஜ்குமார். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் குதம்பநயினார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் நளினிக்கும் கடந்த 27ம் தேதி, நாகை அருகே ஆலத்தம்பாடி தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. 12 பவுன் நகை, கட்டில் மெத்தை பீரோ என சீர்வரிசையுடன் சிறப்பாக நடைபெற்ற இந்த திருமணத்தில் உற்றார் உறவினர்கள் மகிழ்ச்சி பொங்க மணமக்களை வாழ்த்தி தொழுதூரில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

புதுமாப்பிள்ளை மீது புகார்:

அன்றிரவு நடந்த முதல் இரவில், மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை, பாலியல் தொல்லை கொடுத்து மிருகத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்தில் உறைந்த நளினி அங்கே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த பெண்ணின் உறவினர்கள் நளினியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில். தனது மகளுக்கு தாலி கட்டிய ராஜ்குமார், முதலிரவில் வக்கிர புத்தியுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாகவும், அனுமதி இல்லாமல் பாலியல் சீண்டலால் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மணப்பெண்ணை பெண்ணே அல்ல எனக் கூறியதாகவும், எனவே தனது மகளை மானபங்கம் மற்றும் அவமானப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண்ணின் தாயார் பரமேஸ்வரி நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறவினர்களுடன் வந்து புகார் அளித்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது:

அதனை தொடர்ந்து நாகை எஸ்பி ஜவஹர் உத்தரவின் பேரில் ராஜ்குமாரை நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர். கட்டிய மனைவியாக இருந்தாலும், அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்று சட்டம் இருக்கின்ற நிலையில், மனைவியின் அனுமதி இல்லாமல் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget